இந்தியாவின் பிரபல திரையுலக பிரபலங்களில் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மிகவும் குறிப்பிடத்தகுந்தவர். இசைஞானி இளையராஜாவும் இவரும் இணைந்து தொடக்க காலத்தில் மேடைக்கச்சேரி நடத்தி வந்தார்கள். பாலு என்று எல்லோராலும் அழைக்கப்படுகிற எஸ்.பி.பி. 5 ஆம் தேதி கொரானா நோய்த் தோற்று காரணமாக எம்.ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
நேற்று இரவிலிருந்து அவரது உடல் நலத்தில் பின்னடைவு ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக ஐ.சியூ பிரிவுக்கு மாற்றப்பட்டார் .செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தாலும் உடல் நிலை மோசமாக இருப்பதாக மருத்துவ மனை சார்பில் அறிக்கை வெளியாகி யிருக்கிறது .