
தம்பி தனுஷ் தனி ராஜ்யம் நடத்திக் கொண்டிருக்கிறார்.முன்னணி நடிகர்களில் ஒருவர். அண்ணன் செல்வராகவன் கதை வசனம் இயக்கம் என்கிற படைப்பாளிகள் அரசில் முக்கியமானவர்.
இவர் தற்போது தம்பியுடன் மோத நடிப்புக் கோதாவில் தொடை தட்டி இறங்கியிருக்கிறார் .
படத்தின் பெயர் என்ன தெரியுமா ?
சாணிக் காயிதம்.!
ஜோடி யார் தெரியுமா?
கீர்த்தி சுரேஷ்.!
அருண் மாதேஸ்வரன் இயக்கம். இவரது இயக்கத்தில் வஸந்த் ரவி, ரவீனா, பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிற படம் ‘ராக்கி’.
ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். ஆர்.ஏ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. இந்த நிலையில்தான் அருண் மாதேஸ்வரன் அடுத்த பட அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறார் .
நாயகியை முன்னிலைப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் இயக்குநர் செல்வராகவன்.
கீர்த்தி சுரேஷ் – செல்வராகவன் நடிக்கவுள்ள இந்தப் படத்துக்கு ‘சாணிக் காயிதம்’ என்று பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. இந்தப் படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ‘சாணிக் காயிதம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை செல்வராகவன் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.












