ஒருவரை பாதுகாக்க யாகம் செய்தால் போதும் ,காப்பாற்றி விடலாம் என்றால் எதற்காக ஆஸ்பத்திரி ,டாக்டர்கள் ,நான்கு வகை வைத்தியமுறைகள்?
இதைப்போல ஒருவரை யாகத்தினாலும் ஒழிக்கமுடியும் என்கிறார்கள்.
இதையெல்லாம் நம்பவில்லை என்றாலே அவனை நாத்திகன் என்பதாக முத்திரை குத்தி விடுகிறார்கள்.
சரி நமக்கு எதற்கு வம்பு?
கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டார். அது தற்கொலை அல்ல .திட்டமிட்ட கொலை என்கிற கருத்தும் இருக்கிறது.
,இந்தி சினிமாவில் நெபோடிசம் பற்றிய பரபரப்பு விவாதங்கழும் தொடங்கின. .வாரிசு நடிகர், நடிகைகளால் திறமையானவர்களுக்கான வாய்ப்பு பறிக்கப்படுவதாக பலரும் குமுறி வருகின்றனர்.
இதில் வாரிசு நடிகர்களுக்கு எதிராக நடிகை கங்கனாரனாவத் இந்தி பிரபலங்களை கடுமையாக சாடவே அவருக்கு மிரட்டலும் வந்தது.. மேலும் சுஷாந்த் தற்கொலை தொடர்பாக மும்பை அரசியல்வாதிகள் குறித்தும் கருத்து தெரிவித்திருந்தார்.
இதையடுத்து மணாலியில் உள்ள அவரது வீட்டின் அருகே துப்பாக்கிக் குண்டு சத்தம் கேட்டதாக போலீசில் புகார் அளித்திருந்தார்.
தன்னை பாஜக சார்பில் எம்.பி தேர்தலில் போட்டியிட அழைத்ததாக சமீபத்தில் தெரிவித்த கங்கனா ,தனது தாத்தா காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்தவர் என்றும், ஆனால்,தனக்கு அரசியல் ஆசை இல்லை எனவும் கூறி இருந்தார்.
இதன் காரணமாக கங்கானாவைச் சுற்றி எப்போதும் பரபரப்பு, சர்ச்சை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
கங்கனாவின் பாதுகாப்புக்காக அவரது அம்மா,விசேஷ ‘சிறப்பு பூஜை’ ஒன்றை நடத்தி இருக்கிறார்.
இது குறித்து நடிகை கங்கனா ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது:
“என் பாதுகாப்பு பற்றி அம்மா அதிக அக்கறை கொண்டிருக்கிறார். இதற்காக சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்தார். மஹாமிர்துஞ்சயா மந்திரத்தின் ஒரு லட்சம், பதினைந்தாயிரம் பாடல்களை பாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இது தற்போது முடிந்துவிட்டது. ” எனக்கூறியுள்ள கங்கனா, தான் நடத்திய ‘சிறப்பு பூஜை’ வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
ஆனால் சமூக வலைதளங்களில் சில நெட்டிசன்கள், ‘கங்கனா அரசியலில் குதிக்க முடிவு செய்து விட்டார். அதில் வெற்றியை குவிப்பதற்கான யாகமும், பூஜையும் தான் அவர் நடத்தியது அவர் பின்னால் முக்கிய அரசியல் கட்சி இருக்கிறது’ என்றும் கூறி வருகின்றனர்.
கங்கனா தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது .