அழகிய இந்தப்படம் இளவேனிற்காலத்து இளஞ்சூரியனுடையது. இன்று வரை முடிசூடா ராணியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார் திரிஷா.
நடந்து வந்த பாதையில் கடந்துபோன தடைகள் இவரது படிக்கற்கள் ஆயின. சில மைல் கற்களாகவும் நிற்கின்றன.
சொந்த வாழ்க்கையில் சுழலில் சிக்கிய சோகமும் உண்டு. காதலும் ஏமாற்றியது. கல்யாணமேடையும் கலைக்கப் பட்டது . ஏமாற்றியவர் புதிய வாழ்க்கையைத் தொடங்கிவிட்ட நிலையில் ஏமாந்தவர் அதே நினைவில் இருந்தால் அது குறுக்குச்சுவராக நிற்குமல்லவா!
இனி என்ன ,புதிய அத்தியாயம் எழுதுவோம். புதுமைகளைப் படைப்போம் .
பழைய நினைவுகள் எதற்கு? துடைத்து எறி ,தூக்கி வீசு !
என நினைத்தாரோ என்னவோ ,திரிஷா தன்னுடைய இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் இருந்த பழைய படங்கள் அத்தனையையும் எடுத்து எறிந்துவிட்டார் . புதுமைப்பெண் !
https://twitter.com/i/status/1257607114312183808