
பர்மேன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் புதிய படம் ‘தாழ் திறவா’ .
இதில் ஆதவ் கண்ணதாசன், வாணி போஜன், சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். .இவர்களுடன் சின்னத்திரை தொடர் ஒன்றில் நடித்துள்ள குழந்தை நட்சத்திரங்கள் லிசா , லலித் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இயக்குநர் பரணி சேகரன் தாழ் திறவா பற்றி கூறியதாவது,,
“இது மர்மங்கள் நிறைந்த திகில் படம். தொல்பொருள் ஆய்வை மையப்படுத்திய படம் , பெரியவர்கள் முதல் குழந்தைகள் ரசிக்கும் விதமாக இந்தப் படத்துக்கு திரைக்கதை அமைத்துள்ளேன். இதில் நடித்துள்ள லிசா , லலித் ஆகிய இரண்டு குட்டீஸும் கண்டிப்பாக பார்வையாளர்களைக் கவர்வார்கள்.
படத்தில் முக்கியமான கதாபாத்திரம் இருக்கிறது. அது என்ன என்பது சஸ்பென்ஸ். ஒரு சின்ன ஊரில் தொல்பொருள் சோதனை நடக்கிறது. அங்கு மறைந்திருக்கும் நாகரீகம் ஒன்றை கண்டுபிடிக்கிறார்கள். அதனால் ஏற்படும் பிரச்சினைகளைதான் கதை.
இப்படத்தின் 80 சதவீத படப்பிடிப்பை ஊட்டி, கோயம்புத்தூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் 25 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம்.இந்தப் படத்தின் கதையில் கிராபிக்ஸ் முக்கியமான பங்கு வகிக்கும்.” என்கிறார்.
இப்படத்தின் ஒளிப்பதிவை, சாலமன் போஸ் மற்றும் சபேஷ் கே.கணேஷ், ஆகியோர் கவனிக்க, சந்தோஷ் தயாநிதி இசையமைத்து வருகின்றனர்.












