இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படுகிற படங்களில் முக்கியமானது விஜய் நடித்திருக்கிற மாஸ்டர் .இந்த படத்தில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார் கவுரி கிஷன் ஆண்டிரியா இன்னும் பலர் நடித்திருக்கிறார்கள் .இசை அனிருத். சில பாடல்கள் வெளியாகி செம ஹிட் கொடுத்திருக்கின்றன, லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிற இந்த படத்தை திரையுலக முக்கிய புள்ளிகளும் எதிர்பார்த்திருக்கிறார்கள் .
இந்த படம் தியேட்டரில்தான் வெளியாகும் என்பதை தயாரிப்பாளர் உறுதி செய்திருந்தாலும் சிறிய குழப்பம்.
ஆகஸ்ட் மாதம் அமேசான் தளத்தில் வெளியாகும் படங்களின் பெயர்ப்பட்டியலில் மாஸ்டர் படத்தின் பெயரும் இடம் பெற்றிருந்தது. இதுதான் அந்த குழப்பத்துக்கு காரணம்.
தளபதியின் ரசிகர்கள் கொதித்துப்போனார்கள்.
ஆனால் உண்மை என்னவென்றால் மாஸ்டர் படம் அமேசானில் வெளியாவது உறுதிதான். ஆனால் அது தமிழ்ப்படம் இல்லை. கொரியன் படம். அதன் பெயரும் மாஸ்டர் என்பதால் குழம்பிவிட்டார்கள்.
இப்போது குழப்பம் தீர்ந்து விட்டது. கோடிகளை கொட்டி படம் எடுத்திருக்கிற தயாரிப்பாளர் பிரிட்டோ ,தளபதிக்கு நெருங்கிய உறவினர் ஆவார்.