முக்கியமான பிரச்னைகள் மீதான நீதிமன்றத் தீர்ப்புகள் வருகிறபோது அதை விமர்சனம் செய்யக்கூடிய உரிமை இருக்கிறது. அந்த விமர்சனங்கள் மீதான விவாதங்களும் நடைபெறும். எமர்ஜென்சி இருந்த காலத்தில்தான் எழுத்துரிமை ,கருத்துரிமை பறிக்கப்பட்டது. சில நேரங்களில் எமர்ஜென்ஸி மாதிரியே அரசுகள் நடந்து கொள்வதும் உண்டு. அதற்கு காரணம் செல்வாக்குள்ள அரசியல் வாதிகள் தூண்டுவதுதான்.!
அப்படித்தான் நடிகை ஸ்வர பாஸ்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்து அவருக்கு தண்டனை வாங்கித் தருவதில் சிலர் முனைப்புக் காட்டினார்கள் .
ராமருக்கு கோயில் கட்டுவது தொடர்பான வழக்கின் தீர்ப்பு அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. இந்த தீர்ப்புக்கு வழக்கம் போல வாழ்த்துகளும் எதிர்ப்புகளும் வந்தன.
பிரபல பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது ராமர் கோவில் தீர்ப்பு குறித்து அவரது கருத்தினை வெளியிட்டார். இந்த கருத்தை அடுத்து அவர் மீது நீதிமன்ற வழக்கு தொடரப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது
ஆனால் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் ’நடிகையின் கருத்து கிரிமினல் குற்றம் அல்ல. எனவே அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கோ அல்லது வேறு நடவடிக்கைகளோ எடுக்க தேவை இல்லை’என்று அறிவித்து விட்டார்.