கொரானா யாரையும் விட்டு வைப்பதாகத் தெரியவில்லை.
அமிதாப் குடும்பத்தில் மனைவியைத் தவிர மற்ற அனைவரிடமும் விளையாடிவிட்டு சென்றிருக்கிறது. அபிஷேக்கிடம் மட்டும் ஒரு காட்டு காட்டிவிட்டுத்தான் போனது.
தற்போது பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திடம் ஒட்டிக் கொண்டிருக்கிறது.வாட்டி வளைவெடுக்கிறது .ரசிகர்களின் பிரார்த்தனை பலம் அவருக்கு மிகவும் துணையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைவதாக இல்லை.
தற்போது தமன்னா குடும்பத்தில் அம்மா ,அப்பா இருவரையும் கொரானா பற்றிக் கொண்டிருக்கிறது. தமன்னாவுக்கு சோதனை பண்ணியதில் நெகட்டிவ் என வந்து விட்டதால் ரசிகர்களுக்கு ஒரு வகையில் சந்தோசம். பெற்றோருக்காக பிரார்த்தனை பண்ணுகிறார்கள். நமது பிரார்த்தனையும் இருக்கட்டும்.