குரு பார்த்தால் கோடி நன்மை. சரி, குறு குறுன்னு பார்த்தால்?
ஏதோ நல்ல சங்கதி நடக்கப்போகுதுன்னு அர்த்தம் பண்ணிக்கலாம். ஒரு பொண்ணுக்கு குரு பார்வை கிடைத்துவிட்டால் கல்யாணம்தான் என்று காலம் காலமாக சொல்லிவருகிறோமே ,அது பொய்யாகலாமா?
பிரியா ஆனந்துக்கு கல்யாணம் கட்டிக்கொள்கிற நேரம் வந்து விட்டது என்கிறார்கள்..
சில படங்களில் நடித்திருந்தாலும் முக்கியமான கேரக்டரை எதிர்பார்த்து காத்திருப்பது இயல்புதானே.! அப்படித்தான் காத்திருக்கிறார் .
அப்பா அம்மா அமெரிக்காவில்.
கவலையில்லாமல் பிரியா ஆனந்த் சென்னையில்.!
“அடுத்த தீபாவளி தனக்கு தலைத் தீபாவளியாக அமையலாம் ” என்று சொல்லியிருக்கிறார்.
இவரது திரையுலக நண்பர்களில் அதர்வா முக்கியமானவர் .ஆனால் அதர்வா வேறு ஒரு பெண்ணுடன் டேட்டிங்கில் இருப்பதாக சொல்லிவிட்டார்.
தம்பியின் கல்யாணம் முடிந்து விட்டதால் அதர்வாவின் கல்யாணத்தை விரைவில் எதிர்பார்க்கலாம். பார்க்கலாம்.!