கோஷ்டிகள் இல்லாத அரசியல் என்பது அரியதிலும் அரியது . அந்த ஆண்டவனே வந்து கட்சி ஆரம்பித்தாலும் கோஷ்டிகள் என்பது தொங்கு சதையாக ஒட்டியே இருக்கும்.
சற்று அதிகமாகவே கோஷ்டிகள் மலிந்திருக்கிற கட்சி காங்கிரஸ் .இந்திய விடுதலையுடன் தொடர்புடைய அரசியல் இயக்கம் என்பதால் கோஷ்டி பெருக்கம் அதிகம்.
இதை தொடர்ந்து அதிமுக ,திமுக ஆகிய இரண்டு திராவிட இயக்கங்களிலும் கோஷ்டிகள் இருக்கின்றன.
தமிழக காங்கிரசில் கோஷ்டி அரசியல் வெட்ட வெளிச்சமாகவே இருக்கும் .ஒளிவு மறைவு இருக்காது.
காங்கிரஸ் கட்சிக்கு தற்போது எதிர்பாராத இழப்பு ஏற்பட்டிருக்கிறது. எச் .வசந்தகுமார் என்கிற நல்ல மனிதரை இழந்திருக்கிறது. அந்த காட்சியைப் பொருத்தவரை ஈடு செய்ய முடியாதது.பாராளுமன்ற உறுப்பினர்.சிறந்த உழைப்பாளி.
அவரது மறைவுக்காக சென்னை சத்யமூர்த்தி பவனில் ஒரு இரங்கல் நிகழ்ச்சி நடந்தது.பல காங்கிரஸ் தலைவர்களை அந்த கூட்டத்துக்கு கூப்பிடவில்லையாம்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருக்கிற குஷ்பூவைக் கூட கூப்பிடவில்லை. அந்த இரங்கல் நிகழ்வினை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இப்படி பதிவு செய்திருக்கிறார் குஷ்பூ.
“மகத்தான செயல். ஆனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலருக்கு இந்த நிகழ்ச்சி பற்றி சொல்லவில்லை ? தேசிய கட்சியின் செய்தி தொடர்பாளரான எனக்கு நாளேடுகளைப் பார்த்துதான் அத்தகைய ஒரு நிகழ்வு நடந்தது தெரிந்தது.இப்படி இருந்தால் நாம் எப்படி வலிமை பெற முடியும்?” என்று கேட்டிருக்கிறார் .
நியாயமான கேள்விதான்.!