
எலக்சன் நெருங்கி வருது. மக்கள் யாரை செலக்சன் பண்ணுவார்களோ என்கிற பயம் எல்லா கட்சியினருக்குமே இருக்கும். காசை வாங்கிட்டு யாருக்கு குத்துவாய்ங்களோ என்கிற பயம் பணம் கொடுத்து ஓட்டு வாங்க நினைக்கும் அத்தனை கட்சிக்காரனுக்குமே உச்சி மண்டையில உட்கார்ந்திருக்கும்.
ஆனால் எதை பற்றியுமே கவலைப்படாமல் இருக்கிற ஒரே தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்தான்.!
ஆனால் மக்கள் நீதி மய்யத் தலைவர் உலகநாயகன் கமல்ஹாசன் அவருடைய கட்சிக்காரர்களை உசுப்பி விட்டிருக்கிறார். கூடவே அரசியல் கலந்த திரைப்படமும் அவரது கார சார அஜெண்டாவில் இருக்கிறது.அநேகமாக அது லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் வரப்போகிற படமாக இருக்கலாம்.
மாநகரம் , கைதி படங்களைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா நடிப்பில்உருவாகியுள்ள மாஸ்டர் படத்தை இயக்கியுள்ளார்.
லாக்டவுன் முடிவுக்கு வந்தவுடன் இப்படத்தின் வெளியீட்டுத்தேதி அறிவிக்கப்படஇருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்குவதாக பேசப்பட்டது.
லோகேஷ் கனகராஜின் அடுத்தப்படம் குறித்து தற்போது முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.அதாவது, மாஸ்டர் பட த்தை தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணையவுள்ளாராம்.
முழுக்க முழுக்க பக்கா நடப்பு அரசியல் களத்தை மையப்படுத்திய கதை இது என்றும், வரும் 2021 தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னர், இத்திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.












