
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் சுசீந்திரன்.
இவர் வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, ஜீவா, பாயும் புலி, ஜீனியஸ், கென்னடி க்ளப் உள்ளிட்ட பல படங்களை இயக்கிஇருக்கிறார் .
தற்போது இயக்கவுள்ள புதியபடத்தில், சென்னை-28, சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட படங்களில் நடித்த ஜெய் மற்றும் ஈரம், மிருகம் உள்ளிட்ட படங்களில் நடித்த ஆதி ஆகிய இருவரும் முதன் முறையாக இத்திரைப்படத்தில் இணைந்து நடிக்கின்றனராம்.
ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இத்திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நேற்று முன்தினம் தொடங்கியுள்ளது.












