
கொரோனா தோற்று காரணமாக பின்னணிபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு கடந்த 30 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, அவர் உடல் நலம்பெற, திரையுலகத்தினர் கூட்டுப் பிரார்த்தனை செய்தனர்., கவலைக்கிடமாக இருந்த அவர் உடல் நிலையில், நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.
அவர் உடல் நிலை குறித்து, தினமும் வீடியோ மூலம் தகவல் தெரிவித்து வரும் எஸ்.பி.பி.சரண், ‘இன்று தனது தந்தை உடல் நிலை குறித்து நல்ல தகவல் வரும் என்று கூறியுள்ளார். இந்நிலையில், எஸ்.பி. பாலசுப்ரமணியம் – சாவித்திரி தம்பதிக்கு நேற்று முன்தினம் , 51 வது திருமண நாள்.
இந்நிகழ்வை,கேக் வெட்டி கொண்டாட முடிவு செய்யப்பட்டது.இதற்காக, பிரத்யேகமாக சிறிய கேக் ஒன்று வாங்கி வரப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டது. நேற்று எஸ்.பி.பி மனைவி சாவித்திரி மருத்துவமனைக்கு வந்து அவரை சந்தித்தார். அப்போது திருமண நாளை, கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
இந்த திடீர் கொண்டாட்டம், மருத்துவமனையில் டாக்டர்கள், நர்ஸ்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.எஸ்.பி.பியின் மனைவி சாவித்திரியும் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.












