சஞ்சனா கல்ரானி . இவரது சிறப்பு நடிகை நிக்கி கல்ரானியின் உடன்பிறப்பு.ரத்தத்தின் ரத்தம்.
கூடுதல் சிறப்பு கன்னட போதைத்தடுப்பு போலீசால் கைது செய்யப்பட்ட சினிமா நடிகை. அவ்வளவாக படங்களில் நடிக்கவில்லை. முன்னணி நடிகையும் கிடையாது.பெரிய அளவில் சம்பளமும் வாங்கியவர் இல்லை.
“எதுக்குப்பு இவ்வளவு முன்னுரை?”
கேட்காமல் இருக்க முடியாது. கேப்பம்ல !
கேளுங்க.
இவரை அள்ளிக்கொண்ட போலீஸ் குடைந்ததில் பல ஆச்சரிய செய்திகள்.
பெங்களூருவை சுற்றி பத்துக்கும் அதிகமான பிளாட்கள்.!
“இம்புட்டூண்டு சம்பளத்தில் எப்படிம்மா உன்னால இவ்வளவு பெரிய சொத்துக்களை வாங்க முடிஞ்சிது?”
“போதை பொருட்களை விற்றதினால்தான் அந்த அளவுக்கு அவரால் சொத்துக்களை வாங்கி குவிக்க முடிஞ்சிது ” என்பது போலீசின் யூகம். கர்நாடகாவில் உள்ள பெரிய பெரிய மனிதர்கள் இன்னும் மாட்டாமல் இருப்பதால் முழு விவரத்தை போலீசால் வெளியிட முடியவில்லை.
வெயிட் பண்றாங்க.!