ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் வி.ராஜா தயாரித்து ,கதாநாயகனாக நடித்துள்ள புதிய படம் ” அருவா சண்ட ” இதன் ,கதாநாயகி மாளவிகா மேனன்.
முக்கிய வேடங்களில் சரண்யா பொன்வண்ணன், ஆடுகளம் நரேன், கஞ்சா கருப்பு, சௌந்தர்ராஜா,மற்றும் காமெடி நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி வரும் ஆதிராஜன் கூறியதாவது,
“கபடி, கவுரவக் கொலை பின்னணியில் உருவாக்கப் பட்டிருக்கும் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மனசாட்சி உள்ளவர்களின் இதயங்களை உலுக்கி எடுக்கும். சாதியப் பிரச்சனைகளுக்கு சவுக்கடி கொடுக்கும் இப்படம் தணிக்கை அதிகாரிகளால் பெரிதும் பாராட்டப்பட்டு ” யூ ” சான்றிதழ் பெற்றுள்ளது.
கவிஞர் வைரமுத்துவின் வரிகளில், தரண் இசையில், இந்த படத்தில் இடம்பெறும் இரண்டாவது வீடியோ பாடலான ” இவ சித்தூரு சிறுக்கி செக்ஸான கிறுக்கி ” என்னும் கலகலப்பான குத்து பாடலை தயாரிப்பாளர் வி.ராஜா தற்போது வெளியிட்டுள்ளார்.
பட்டி தொட்டியெங்கும் தற்போது பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் இந்த பாடலுக்கு தீனா நடனம் அமைத்துள்ளார்,
‘எம் பேரு மீனா குமாரி’ பாடலை பாடிய அனிதா இந்த பாடலை தனது கிக்கேற்றும் குரலில் பாடி அசத்தியிருக்கிறார். இப் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகும் சுப்ரா கோஷ் தனது நளினமான நடன அசைவுகளில் ரசிகர்களை வியக்க வைக்கும் அளவிற்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார்.என்கிறார். இப்படத்தின் ஒளிப்பதிவை,சந்தோஷ் பாண்டி கவனிக்க, தரண் இசையமைத்து வருகிறார்.