கருப்பன் படத்தில் விஜய்சேதுபதிக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடித்த தன்யா ரவிச்சந்திரன்,பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி
தொடர்ந்து, நடிகர்,இயக்குனர் சசிகுமாருடன் பலே வெள்ளையத் தேவா,ராதாமோகனின் பிருந்தாவனம் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தவருக்கு எதிர்பார்த்த மாதிரி பட வாய்ப்புகள் அமையாததால், தெலுங்கு படவுலகம் நோக்கி தன கவனத்தை திருப்பியுள்ளார்.
தெலுங்கில், ஸ்ரீ சரிபள்ளியின் இயக்கத்தில், கார்த்திக்கேயா கம்மகொண்டாவின் ஜோடியாக பெயரிடப்படாத படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை தொடர்ந்து தமிழில் அறிமுக இயக்குநர் கிஷோர் இயக்கத்தில்,சிபி சத்யராஜூடன்ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளார்.