இது காதலா அல்லது ஆண்ட்ரியாவுடன் இருந்த நட்பு மாதிரியா என்பதை அனிருத்தைக் கேட்டால்தான் தெரியும். அல்லது ரேடியோ ஜாக்கி சுசித்ராவை கேட்டாகவேண்டும்.அவர்தான் அனிருத் காதல் வயப்பட்டிருக்கிறார் என்கிற பரபரப்பு செய்தியை வெளியிட்டார்.
ஐஸ்வர்யாதனுஷ் இயக்கிய 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர்
அனிருத்.
அப்படத்தில் இடம்பெற்ற, ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் அவரை உலகளவில் பிரபலமாக்கியது. இதையடுத்து குறுகிய காலத்திலேயே தல அஜித்,தளபதி விஜய், சூப்பர்ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல் ஆகியோரது படங்களுக்கு இசையமைத்து நட்சத்திர இசையமைப்பாளராக உயர்ந்தார்.
தற்போது அனிருத்,விஜய்யின் மாஸ்டர், கமலின் இந்தியன் 2, மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல், சிவகார்த்திகேயனின் டாக்டர், சீயான் விக்ரமின் சியான் 60 உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் அனிருத் பிரபல பாடகி ஜோனிடா காந்தியை காதலித்து வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப் படுகிறது. சமீபத்தில் ஜோனிடா காந்தியும், அனிருத்தும் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்திற்காக பாடிய ‘செல்லம்மா’ பாடல் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது..கடந்த சில வருடங்களுக்கு முன்பு,அனிருத், ஆண்ட்ரியா முத்தகாட்சி புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,எந்தவித காதல் சர்ச்சையிலும் சிக்காமல் இருந்த அனிருத், தற்போது பாடகி ஜோனிடாவுடனான காதல் ‘கிசுகிசு’வில் சிக்கியுள்ளார்.