அதிரடி கொடுக்கவில்லை என்றால் சினிமாவில் வாழ முடியாது. படுத்திருக்கிறபோதுகூட கால்களை ஆட்டிக்கொண்டே இருக்க வேண்டும் இல்லையென்றால் ஆள் காலி என்று கதையை கட்டிவிடுவார்கள் என்பார்கள்.
தற்போது நடிகர் சிம்பு, இயக்குநர் வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாநாடு படத்தின் படப்பிடிப்பு மீண்டும் விரைவில் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் சிம்புவுக்கு இயக்குநர் சுசீந்திரன் கூறிய கிராமத்து கதை மிகவும் பிடித்து இருப்பதாகவும், மாநாடு படப்பிடிப்பு முடிவடைந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்ள உள்ளதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது புதிய தகவல் ஓன்று வெளியாகியுள்ளது.
அதாவது, மாநாடு படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்பு, இயக்குநர் சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் சிம் பு நடிக்கவுள்ளார் என்பது தான். 2016-ல் சிம்பு சினி ஆர்ட்ஸ் படநிறுவனம் சிம்பு,நயன்தாரா ஜோடியாக நடித்த இது நம்ம ஆளு படத்தை தயாரித்திருந்த நிலையில்,தற்போது 4 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் சிம்புவின் சொந்த நிறுவனமே இத்திரைப்படத்தையும் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. உடனடியாக தொடங்கவிருக்கும் படப்பிடிப்பிற்கு நடிகர் சிம்பு 25 நாட்களை ஒதுக்கி இருப்பதாகவும்
கூறப்படுகிறது.