வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகை சாய் பல்லவி,
தற்போது பிரபல ஓடிடி நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகும் அந்தாலஜி திரைப்படங்களில் முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.
இந்நிலையில், சாய் பல்லவி நடுக்காட்டில் அந்தரத்தில் தொங்கியவாறு வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாகி வருகிறது. நடுக்காட்டில் ஆற்றின் மேலே தொங்கும் விழுதுகளை பிடித்து ஊஞ்சல் ஆடியவாறு சாய்பல்லவி வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்திற்கு ” டார்வின்ஸ் தியரி” மெய்ப்பிக்கப்பட்டது என தலைப்பிட்டுள்ளார். குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்பது டார்வினின் தத்துவம்.