சல்மா ஹயக் .ஆலிவுட் நடிகை. ‘வைல்ட் வைல்ட் வெஸ்ட் ‘,ஃ பிரிடா ஆகிய படங்களில் நடித்தவர். முக்கிய நடிகை. ஆலிவுட் நடிகைகள் எப்படி இருப்பார்களோ அப்படி கனத்த இளமையுடன் இருப்பவர். அவருக்கு ‘மகாலட்சுமி ‘மீது அளவு கடந்த பக்தி.அவர் மகாலட்சுமி படத்துடன் ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார் .இந்திய கடவுள்கள் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.
இந்தியக்கடவுளான லட்சுமி தனக்கு மன மகிழ்ச்சியை தருவதாக பதிவு செய்திருக்கிறார்.
“என்னுடைய மெடிடேசனுக்கு லட்சுமியைத்தான் ஃபோகஸ் பண்ணுவேன்.பணம், எதிர்காலம் ,அன்பு ,அழகு ,மாயை, மகிழ்ச்சி ,ஆரோக்கியம் எல்லாவற்றுக்கும் அவர்தானே நம்பிக்கை. அந்த நம்பிக்கை எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.”என்கிறார்.லட்சுமி படத்தையும் பதிவு செய்திருக்கிறார்.
ஜூலியா ராபர்ட்ஸ் .மிலே சைரஸ் ஆகிய ஹாலிவுட் புள்ளிகளுக்கும் இந்திய கடவுள்கள் மீது பக்தி உண்டு.