வெற்றியும் தோல்வியும் விளையாட்டில் நடப்பதுதான்.
தொடர்ச்சியாக யாரும் வெற்றி பெற இயலாது.அதைப்போல தோல்வியும் தொடர்கதையாக அமைவதில்லை.
அண்மையில் சி.எஸ்.கே.அணியும் ,கே கே.ஆர் அணியும் மோதியதில் பத்து ரன் வேறுபாட்டில் வெற்றியை சி.எஸ்.கே.இழந்தது. இதற்கு முனை நடந்த சில போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியது. ஆதரவாளர்கள் கலங்கினார்கள். குழுவாக ஆடுகிற விளையாட்டில் பலர் சொதப்புவார்கள் அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். தோனியின் நற்பெயரை கெடுப்பதற்காக சிலர் செயல் பட்டிருக்கலாம். எனவே தோனியை குற்றம் சாட்டுவது அநீதி.
இது பக்கம் இருக்க மற்றொரு பக்கம் மிக மிக கேவலமான இழிவான செயலில் ஈடுபட்டிருக்கிறார்கள் .
பாரதிய ஜனதா ஆட்சியில் பாலியல் வன்புணர்வு தேசியமயமாக்கப்பட்டுவிட்டதோ என்று சந்தேகம் கொள்கிற அளவுக்கு நாட்டில் குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை பாலியல் வன்புணர்வுக்கு பலியாகி செய்தியாக வந்து கொண்டிருக்கிறார்கள்.
தற்போது இந்தியர்களின் அன்பினை பெற்றுள்ள கிரிக்கெட் வீரர் தோனியின் 5 வயது மகளுக்கு கற்பழிப்பு மிரட்டல் வந்திருக்கிறது. என்ன கொடுமைடா காட்டுமிராண்டிகளா?
தோனியின் மனைவிக்கும் மிரட்டல் .
“மிஸ்டர் பிரதமர்,நமது நாடு எதை நோக்கிப்போய்க்கொண்டிருக்கிறது? தோனியின் 5 வயசு மக்களுக்கு கற்பழிப்பு மிரட்டலா?நமது நாட்டில்தானா இந்த கொடுமைகள் நடக்கின்றது?”என்று முன்னாள் நடிகை நக்மா கேட்டிருக்கிறார்.
கர்நாடக பெண் எம்.எல்.ஏ சவும்யா “இது மிகவும் கேவலம் நமது நாட்டுக்கு என்ன நேர்ந்தது நாம் எதை நோக்கிப்போகிறோம்?” என்று கேட்டிருக்கிறார்.
ஆனால் அரசுத்தரப்பில் எந்த அசைவையும் காணவில்லை.!