“அழிஞ்ச கொல்லையிலே கழுத்தை மேஞ்சா என்ன குதிரை மேஞ்சா என்னங்கிற கதையாகிப்போச்சு பாலிவுட்டில்.!
“என்னைத்தான் கையைப்பிடிச்சு இழுத்தான்னு சொல்லிட்டுப்போகாமல் துணைக்கு நாலைஞ்சு பொம்பளைக பேரை சொன்னா ஸ்டிராங்கா இருக்கும்னு நெனச்சு விட்ட கல்லு தன்னையே வந்து திருப்பி தாக்குனா எப்படி இருக்கும்?
அப்படி ஆகிப்போச்சு நடிகை பாயல் கோஷ் சொன்ன கதை.
டைரக்டர் அனுராக் காஷ்யப் பற்றி பாயல் பாலியல் வன்கொடுமை புகார் கூறும்போது, ரிச்சா சதா, மஹி கில், ஹூமா குரேஸி உள்ளிட்ட சில நடிகைகளின் பெயர்களையும் சொல்லி இருந்தார்.அந்த நடிகைகளையும் அவர் விடல என்கிற கருத்தில் சொல்லியிருந்தார்.
“மூதேவி.உன்னை கையை பிடிச்சு இழுத்தா சங்கதியை உன்னோட வச்சுக்க வேண்டியதுதானே ,ஏன்டி எங்களையும் இழுக்கிறே “என்கிற ரீதியில் சக நடிகைகளுக்கு காட்டம்.
அந்த நடிகைகள், தங்கள் மீதான புகாரை மறுத்திருந்தனர். அதோடு, அனுராக் தங்களிடம் தவறாக நடக்கவில்லை என்றும் கூறியிருந்தனர்.
நடிகை ரிச்சா சதா விடவில்லை., பாயல் கோஷ் மீது ரூ.1.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மும்பை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். வா சபைக்கு என்று இழுத்ததும் அம்மணி ஆடிப்போய் விட்டார்.
வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பாயல் கோஷின் வழக்கறிஞர் நிதின் சத்புதே, ரிச்சா சதாவுக்கு எதிரான தனது கருத்தை பாயல் கோஷ் திரும்ப பெறுவதாகவும் மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து ட்விட்டரில் ” ரிச்சா சதாவுக்கு எதிரான நான் எதையும் சொல்லவில்லை. இந்த விஷயத்தில் பெண்களாகிய நாம் ஒருவருக்கொருவர் ஒன்றாக நிற்கவேண்டும். எனது போராட்டம் அனுராக் காஷயப்புக்கு மட்டுமே எதிரானது. அவருடைய உண்மையான முகத்தை இந்த உலகம் காணப்போகிறது” என்று பாயல் கோஷ் தெரிவித்திருக்கிறார் . கூடவே இன்னொரு குண்டும் போட்டிருக்கிறார்.
” என்னை மாஃபியா கொன்று விடும் . அதை தற்கொலை என்று நிரூபித்துவிடும்” என்றும் திடீரென பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரதமர் மோடி, தேசிய மகளிர் ஆணைய சேர்மன் ரேகா சர்மா ஆகியோருக்கும் டேக் செய்து தன்னை காப்பாற்றுமாறு கூறியுள்ளார். இந்த மேடையில் இன்னும் என்னென்னெ நடக்குமோ தெரியாது.