
“அஞ்சாறு மாசமா வேலை வெட்டி இல்ல, தயாரிப்பாளர்களும் வட்டி கட்டி மாஞ்சு போறாங்க. அதனால நடிகர்கள் வாங்குற சம்பளத்தை குறைச்சிக்கிட்டா நல்லாருக்கும் ” என்று இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒரு மனதாக ஒரு கோரிக்கை வைத்திருந்தார்கள்.
கேரளத்தில் குறைத்துக்கொண்டார்கள்.தமிழகத்திலும் சிலர் குறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் சீனியர் நடிகர் முரளி சர்மா என்பவர் தெலுங்கு ,தமிழ்ப்படங்களில் வில்லனாக ,வில்லனுக்கு பக்கத்துணையாக நடித்திருக்கிறார்.
அவரது தினசரி சம்பளமாக இரண்டே கால் லட்சமாக இருக்கிறது.
இதை குறைத்துக் கொள்ள சொல்லுகிறார்கள்.
ஆனால் தயாரிப்பாளர் சங்கமோ ,கொரானாவோ எதுவாக இருந்தாலும் ஊதியத்தைக் குறைத்துக் கொள்வதாக இல்லை என்பதாக முரளி சர்மா சொல்லிவிட்டாராம்.
வாவ் …..மனுஷன்யா !












