
உள்ளம் உருக எழுதியிருக்கிறார். ஆனால் அது நிஜமா?
கேள்விகள் எழத்தான் செய்யும். குற்ற உணர்வுகள் அழுத்தம் தாங்காமல் அப்படி கசிந்து இருக்கிறதா? யாமறியோம் பராபரமே!
வனிதா விஜயகுமாரின் கடந்த கால நிகழ்வுகளைப் பார்த்தால் வார்த்தைகளில் அனல் அடிக்கும்.வசைகள் மிகுந்து இருக்கும்.
அண்மையில் மூணாவது கணவர் பீட்டர்பாலுடன் கோவா சென்றிருந்த வனிதா பீட்டர்பாலுக்கு இடையில் சண்டைகள் ,சச்சரவுகள் ,அடி உதைகள் என ஊடகங்களில் பலவாறு செய்திகள் வந்தன. தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரனும் “உண்மைதான் .வீட்டை விட்டு பி.பி ஐ விரட்டிவிட்டார்” என்பதாக செய்தி வாசித்திருந்தார்.
வனிதாவின் வாழ்க்கையில் மற்றொரு ஏமாற்றம் நடந்து விட்டதோ என்று எண்ணுகிற அளவுக்கு அவரது பெரிய அறிக்கையில் ஒரு பகுதி அமைந்திருக்கிறது.
“நான் எதையும் தவறாக செய்யவில்லை. ஒருவருக்கு அன்பு தேவைப்பட்டது..நான் அன்பு செலுத்தினேன்.
தற்போது என் கனவுகள் ,நம்பிக்கைகள் ,நொறுங்கிவிட்டன.
கையறு நிலையில் இருக்கிறேன்.
இதுவும் கடந்து விடும்.
இதற்கு மேல் நான் யாருக்கும் விளக்கம் சொல்லவேண்டிய அவசியம் இல்லை.!
என் கணவர் மீது குறை சொல்லி அதன் வழியாக ஆதாயம் தேட மாட்டேன்.”
இதுதான் வனிதாவின் இன்றைய நிலை.! பீட்டர்பாலின் முதல் மனைவியின் சாபமோ என்னவோ!












