
விஜய் தன்னுடைய பனையூர் பண்ணை வீட்டில் மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்துப் பேசி வருகிறார். தேர்தல் வருகிற நேரத்தில் இப்படி சந்தித்துப் பேசுவதால் அரசியல் தொடர்பான விஷயமாக இருக்குமோ என்கிற சந்தேகம் இயல்பாகவே எழுவது இயல்பு.
சில மாவட்டங்களில் ரசிகர்களின் மாநாடுகளையும் விஜய் நடத்தியிருக்கிறார் . தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி, தமிழகம் முழுவதும் அதற்கு நிர்வாகிகளையும் நியமித்து உள்ளார். அவரது மக்கள் இயக்கத்தினர் சில அரசியல் கட்சியினர் போல, தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிககளையும் வழங்கி வருகிறார்கள்.
,கடந்த 2 நாட்களுக்கு முன்பு,விஜய் மக்கள் இயக்கம் உரிய நேரத்தில் அரசியல் கட்சியாக மாறும் என அவரது தந்தை சந்திரசேகர் கூறியிருந்த நிலையில் சென்னை அருகே உள்ள பனையூரில்உள்ள தனது பண்ணை வீட்டில் மக்கள் இயக்க நிர்வாகிகளை விஜய் திடீரென்று சந்தித்து ஆலோசனை நடத்தி வருவைத்து குறிப்பிடத்தகுந்த செய்தியாகும்.
. அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். நேற்று,திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகளுடனும், மகாராஷ்டிரா மாநில மக்கள் மன்ற நிர்வாகிகளுடனும் விஜய் ஆன்லைன் மூலம் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விஜய் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியிருப்பது பரபரப்பாக பேசப்படுகிறது.












