‘ஐ’ படம் இயக்குநர் ஷங்கர்,குறித்து கூறியதாவது,
‘விக்ரம் இதில் நடிக்க ஒத்துக் கொண்டதே என்னை ஆச்சரியப்படுத்தியது. வேறு எந்த நடிகராவது இந்த ஸ்கிரிப்ட்டை கேட்டால் நடிக்க ஒத்துக் கொள்வார்களா என்பதே சந்தேகம்தான். இதில் ஆச்சரியமான விஷயம்,படத்தில் இடம் பெறும் கிராபிக்ஸ் வேலைகளெல்லாம் அது கிராபிக்ஸ்தான் என்று ஆடியன்ஸுக்கு தெரியாத அளவுக்கு இருக்கும். சில காட்சிகள் குறிப்பாக எமி ஜாக்சனுடன் பைக்கில் செல்லும் ஷாட்டுகள் ஸ்பெஷல் எபெக்ட்ஸில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கிராபிக்ஸ், ஸ்பெஷல் எபெக்ட்ஸ் காட்சிகளுக்காக ரைஸிங் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நாங்கள் வேலை செய்துள்ளோம்.இந்த ‘ஐ’ படம் சீன மொழியிலும் டப்பிங் செய்யப்படவுள்ளது. இது தயாரிப்பாளரின் ஐடியா. நாங்க இந்தப் படத்தை சீனாவில் ஷூட்டிங் செய்தபோதே அங்கேயிருந்த மக்கள் இந்தப் படத்தை பார்க்கணும்னு சொன்னாங்க..சீனாவில் ஷூட்டிங் எடுத்த து மிகப் பெரிய விஷயம். சொல்லவே முடியாத அளவுக்கு மழையும், பனியும் கொட்டியது.. இந்த நிலைமையிலேயே நாங்க அங்க 45 நாள் தங்கியிருந்து ஷூட் செஞ்சோம். அங்கே ஷூட்டிங்கிற்கான அனுமதியெல்லாம் ரொம்ப குறைவு. அதுனால நாங்களும் ஷூட்டிங் ஷெட்யூலை அதுக்கேத்தாப்புல குறைச்சோம்.. இதுவரைக்கும் ஷூட் செய்யப்படாத பல பகுதிகளில் இந்தப் படத்துக்காக ஷூட்டிங் எடுத்திருக்கோம். இப்பல்லாம் எல்லா சினிமாக்களிலும் குறைந்தபட்சம் 5 பாடல்கள் இருக்கு. எல்லா பாடல்களையும் ஒரே லொகேஷன்ல எடுத்துக் காண்பிச்சிட்டிருந்தா ரசிகர்களுக்கு போரடிக்கும்..! நான் ஒரு தயாரிப்பாளரா சின்ன பட்ஜெட் படங்களைத் தயாரிச்சிருக்கேன். ஆனால் என்னுடைய ஸ்கிரிப்ட் பெரிய பட்ஜெட் படங்களுக்கானது.. என்னுடைய படங்களை எதிர்பார்த்து வர்ற ரசிகர்களும் இப்போ இதைத்தான் விரும்புறாங்க..!நான் தேவையில்லாமல் செலவு செய்றதில்லை.. ‘முதல்வன்’ படத்துல பார்த்தீங்கன்னா ஹீரோ ஹீரோயினை தேடிப் போய் பார்க்குற சீன்ல ஒரு பாடல் வரும். அந்தப் பாடல் முழுக்கவே ஹீரோவுக்கு வேஷ்டியும், மஞ்சள் சட்டையுமான சிம்பிளான காஸ்ட்யூம்தான்..!என்னிடமிருந்து சின்ன பட்ஜெட் படங்களை ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருந்தால் நானும் சின்ன பட்ஜெட் படங்களை எடுக்கவும் தயாரா இருக்கேன். பெரிய பட்ஜெட் படங்கள் எனக்குப் போரடித்தால் நிச்சயமாக சின்ன பட்ஜெட் படத்தினை எடுப்பேன்.. ஆனால் இப்போது இது மாதிரியான படங்களில் எனக்கு சந்தோஷமே..!
படத்தின் டீஸர் லீக் ஆனதால் நான் அதை மாற்றப் போவதில்லை. எப்படியிருந்தாலும் நாங்க செய்த டீஸர் சிறப்பானதுதான்.. இந்த 50 செகண்டு டீஸருக்காக நாங்க ஒரு மாதம் முழுக்க உழைத்திருக்கிறோம்.. இது லீக் ஆனதுகூட எங்களுக்குக் கிடைத்த ப்ப்ளிசிட்டிதான்.. இது லீக் ஆகாமல் இருந்தால் இது ரகசியமாவே இருந்திருக்கும். எப்படியோ இரு வழிகளிலும் எனக்கு இது நல்ல விஷயம்தான்..
இதுவொரு ரொமான்டிக் திரில்லர் படம். நான் இதுவரையில் செய்திருக்காத படம். ஏ.ஆர்.ரஹ்மான் இதுவரைக்கும் கொடுக்காத இசையையும், பாடல்களையும் இதுல கொடுத்திருக்கிறார். இந்த அற்புதமான பாடல்களின் உருவாக்கம் நிச்சயமா நான் இதுவரைக்கும் செய்யாத்து.. இந்த ஐ படத்துலதான் செஞ்சிருக்கேன்..!இந்த மாதிரியான கதை உருவாக்கமெல்லாம் தானா வருவதுதான்.. என்னுடைய ஐடியாவெல்லாம் பெரிய பட்ஜெட் படங்கள்.. பெரிய அளவுக்கு செலவு பிடிப்பதுதான்.. நான் நினைப்பதையெல்லாம் நினைச்ச மாதிரியே கொண்டு வரணும்னு நினைப்பேன். அப்படி நான் நினைச்சதுல 50 சதவிகிதமாவது செஞ்சாகணும்னு நினைக்கிறவன் நான். அது பட்ஜெட்டுக்கும் பொருந்தும்.. மிகச் சிறப்பான தொழில் நுட்பக் கலைஞர்கள் நம்ம நாட்ல இருக்காங்க. நாம எதற்கும் குறைந்தவர்களில்லை. ஆனால் ஒரேயொரு பிரச்சினை.. பட்ஜெட்தான்..
சரியான நபர்கள் கிடைத்தால், இந்தப் படம் இ ந்தியிலும் மூவ் ஆகும்.. ஹிந்தி வெர்ஷனுக்காக மேலும் 10, 15 கோடிகளை விளம்பரத்திற்காக செலவு செய்யக்கூடிய நபர் கிடைத்தால் ‘ஐ’ இன்னொரு உயரத்திற்கு நிச்சயம் செல்லும்’ இவ்வாறு அவர் கூறினார்…