தமிழ்நாடு மூவி மேக்கர்ஸ் சங்கம்’ என்ற பெயரில் புது அமைப்பு உருவாகிறது.
இந்த அமைப்பு வரும் டிசம்பர் 5ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் தயாரிப்பாளர்கள் சங்கம் ,நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் ,கில்டு என்று மூன்று சங்கம் இருக்கிறது. தற்போது நான்காவது சங்கமாக ‘தமிழ்நாடு மூவி மேக்கர்ஸ் சங்கம்’என்கிற புதிய சங்கம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த புதிய அமைப்பின் நிர்வாகிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் டி .ராஜேந்தர் தலைவராக இருப்பார் என்கிறார்கள்.