
ஒரு காலத்தில் ஷகீலா நடித்திருந்த படங்கள் வாலிப ,வயோதிக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.அவரது பயோபிக் என்று ஷகீலா படம் கிருஸ்துமஸ் புனித நாளில் வெளியாகிறது.!
“மாராப்பு விலகாதான்னு பாத்து வளந்தவங்கய்யா ” என்கிற சீர்மிகு வசனம் இந்த படத்தின் முன்னோட்டத்தில் இருக்கிறது.
அப்பு….நீங்க இந்துநேசன் பத்திரிகை காலத்தில் வாழ்ந்த ஆளா தெரியிது .இப்பல்லாம் இருட்டுக்குள் முரட்டு குத்து ,ரெண்டாம் குத்து ,மூணாம் குத்துன்னு ரொம்ப ரொம்ப முன்னேறி இருக்காங்க.
மாராப்பு விலகியத்தை விட நடிகைகளின் இன்ஸ்டராகிராமைப் பார்த்தால் அதை விட தூக்கியடிக்கிற மாதிரி படங்களை பார்க்கலாம்.
பிரசாத் லேப் இன்று முன்னாள் நடிகை ஷகீலா வந்ததினால் ஹவுஸ்புல்.!
நடிகர் தம்பி ராமையா ,தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளில் ஒருவரான ராதாகிருஷ்ணன் ,இயக்குனர் பிரவீன்காந்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
ஷகீலா பேசுகையில் “என்னுடைய வலிகளை பற்றியெல்லாம் பேசினார்கள்.நான் அதை பற்றியெல்லாம் பேசப்போவதில்லை. இன்றைய நடிகைகள் ,இளைய தலைமுறையினர் ஆகியோர் என்னைப்போல ஏமாந்து விடக்கூடாது ” என்று கேட்டுக் கொண்டார்.












