
லண்டனைச் சேர்ந்த டன்ஸ்டன் இன்டர்நேஷனல் (Dunstan International) நிறுவனம் புதிய தமிழ்த் திரைப்படத்தைத் தயாரிக்கிறது. இப்படத்தில் நிறுவனத்தின் நிறுவனர் துஷாந் கதாநாயகனாக நடிக்கிறார்.*
*‘வட்டக்கானல்’ திரைப்படத்தை இயக்கிய பித்தாக் புகழேந்தி இப்படத்தை இயக்குகிறார். இவரது திரைக்கதையால் ஈர்க்கப்பட்ட தயாரிப்புக் குழு, அவரை இயக்குநராகத் தேர்வு செய்துள்ளது.*
*படத்தை பிரமாண்டமான முறையில், மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. தற்போது படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கான தேர்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.*
*கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வரும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.*
*படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.












