தாயைப்போல பிள்ளை ,நூலைப்போல சேலை என்று தெக்கித்தி சீமைகளில் பரவலாக சொல்வார்கள்.
அது உண்மைதான் என்பதை உறுதி செய்திருக்கிறார் வனிதா விஜயகுமாரின் மகள் .நடிகர் விஜயகுமாரின் பேத்தி.
அம்மா கிட்டத்தட்ட பல கணவர்களை பார்த்து விட்டு அண்மையில்தான் பீட்டர்பால் என்பவரை கிறிஸ்தவ முறைப்படி கல்யாணமும் செய்து கொண்டார்.
அந்த பீட்டருக்கு முதல் மனைவி இருக்கிறார்.
சிறிது காலம் சக்களத்தி சண்டை காவல் நிலையம் வரை போனது.
“பீட்டர்பாலை காதலித்துதான் கல்யாணம் செய்து கொண்டேன்” என்று சொன்ன வனிதா கோவாவுக்கு சென்ற இடத்தில் சண்டை போட்டு அவரை ‘விட்டதடா ஆசை விளாம்பழ ஓட்டோட’ என்று கழற்றி விட்டார்.
அண்மையில் மீண்டும் காதலில் என்று ஒரு பதிவு.
அது வினையோ விளையாட்டோ தெரியாது.
தற்போது என்ன விசேஷம் என்றால் வனிதாவின் மகளும் இன்ஸ்ட்டாவில் ஒரு பதிவு போட்டிருக்கிறார்.
“டைவர்ஸ் பரவாயில்லை.பிரேக் அப் பரவாயில்லை. அதிலிருந்து விடுபட்டு வருவது நல்லதுதான்.
ஆனால் ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தால்தான் நீங்கள் மதிக்கப்படாமல் இருப்பீர்கள்!”
அடடா என்னே தத்துவம் ! தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை என்பதன் பொருள் புரிகிறதா?