சிஸ்டர் அபயா கொலை வழக்கில் தீர்ப்பு கிடைப்பதற்கு 28 வருடங்கள் ஆகி இருக்கின்றன..
தீர்ப்பினை கேட்பதற்கு அபயாவின் அப்பா ,அம்மா இருவருமே இல்லை. மரித்துப்போய் மண்ணோடு மண்ணாக மக்கிப்போனார்கள்.
கேரளத்தை உலுக்கியது அபயாவின் மரணம் .
சிஸ்டர் அபயாவை கொலை செய்தது கத்தோலிக்க ஃ பாதர் தாமஸ் கோத்தூர் ,கன்னியாஸ்திரி செபி என கேரளா சிபிஐ தனி நீதிமன்ற நீதிபதி ஜெ.சனல் குமார் தீர்ப்பளித்திருக்கிறார்.
1992 -ல் கோட்டயம் கான்வென்டில் சிஸ்டர் அபயா பிணமாக கிடந்தார்.வயது 28.
தண்டிக்கப்பட்ட இருவர் உள்பட மூவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.ஃ பாதர் பூதரகயால் வழக்கு நடைபெற்ற காலத்திலேயே போதிய சான்றுகள் இல்லை என விடுவிக்கப்பட்டார்.
முதலில் இந்த வழக்கினை விசாரித்த உள்ளூர் போலீஸ் ,குற்றவியல் துறை இரண்டும் அபயாவின் மரணத்தை தற்கொலை என்பதாக முடிவு செய்து கட்டம் கட்டின.
ஆனால் அபயாவின் தந்தை தாமஸ் ,அம்மா லீலாம்மா மற்றும் மக்களும் விடாமல் போராடியதில் சிபிஐ விசாரணை நடந்தது.
சிபிஐ விசாரணையில்தான் பல உண்மைகள் வெளியாகின .
சிஸ்டர் அபயா கோடாரியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பதை கண்டு பிடித்தது.!
அதற்காக 28 ஆண்டுகள் கழித்து நீதி வழங்க வேண்டுமா?
மூன்று குற்றவாளிகளும் தவறான குற்றச்செயல்களில் ஈடுபட்டதை அபயா கண்டுபிடித்துவிட்டார் என்பதே கொலைக்கான காரணம்.
தண்டனை விவரம் புதன் கிழமை அறிவிக்கப்படும்.