அகில இந்திய திரைப்பட கூட்டமைப்பின் தலைவராக பிரபல தமிழ்ப்படத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
இதுவரை பெரும்பாலும் வட இந்தியர்கள் வசமே இருந்த அந்த தலைவர் பதவி தற்போது ஒருமனதாக தாணுவுக்கு வந்து சேர்ந்திருக்கிறது.
அகில இந்திய அளவில் மட்டுமின்றி,தென்னக அளவிலும் திரை உலகில் பல பிரச்னைகள் .
இவைகளை எல்லாம் தீர்த்து வைப்பதற்கு அனுபவம் வாய்ந்த ஒரு தயாரிப்பாளர் தேவைப்படுகிறார்.
எல்லாவகைகளிலும் திறமைவாய்ந்த ஒருவர் கலைப்புலி தாணு.
பொருத்தமான பெருமைமிகு தாணுவுக்கு தமிழ்த்திரைப்பட உலகம் சார்பில் மிகப்பிரமாண்டமாக ஒரு விழா எடுக்கப்படவிருக்கிறது.
திரைப்பட அரங்குகள் சங்க செயலாளர் ஸ்ரீதர் அந்த விழா தொடர்பாக சினிமாமுரசத்திடம் பகிர்ந்து கொண்டார்.
“மார்ச் மாதம் நடக்கப்போகிறது அந்த பாராட்டு விழா. அதற்கான முன்னெடுப்பு வேலைகளை விரைவில் மேற்கொள்ளவிருக்கிறேன்.
தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,மற்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை அழைப்பதாக இருக்கிறோம்.
கட்சி சார்பற்ற முறையில் எல்லா அரசியல் கட்சித் தலைவர்களையும் அழைப்பதாக இருக்கிறோம்.
எல்லாமே இனிமேல்தான் பேசி முடிவெடுக்கப்பட இருக்கிறது.
ஏனைய விவரங்களை பின்னர் அறிவிப்பேன்” என்கிறார் திருச்சி ஸ்ரீதர்.