
மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசன் செல்லுமிடமெல்லாம் மாபெரும் கூட்டமாகவே இருக்கிறது.
இன்னும் அழுத்தமாக சொல்லவேண்டுமென்றால் மாநாடு நடத்துகிறார் என்பதாகவே சொல்கிறார்கள்.
இது மற்றைய கட்சிக்காரர்களுக்கு அதிர்ச்சியாகவே இருக்கிறது.
இவ்வளவு கூட்டமா என்று ஆளும்கட்சி முதல் ஏனைய முக்கிய கட்சிகள் காரணங்களைத் தேடிக் கொண்டிருக்கின்றன.
அமைச்சர்கள் எப்படியெல்லாம் கமல்ஹாசனை விமர்சிக்கவேண்டுமோ அதற்கு குறை வைக்காமல் செய்து வருகிறார்கள்.
ஆனால் கமல்ஹாசன் தயங்கியபாடாக இல்லை.
வெளுத்து வாங்கிவருகிறார்.
“ரேசன் கடையில் கொடுப்பது மாமனார் வீட்டு பொங்கல் சீதனம் அல்ல.
தங்கள் சொந்தப் பணத்தைக் கொடுப்பது போல ஆளுங்கட்சி விளம்பரம் செய்து கொள்வது ஆபாசமானது.
உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் ரேஷன் கடை பிரச்சாரம் தொடர்வது குள்ள நரித்தனம்.
ஒரிஜினல் நரிகள் மன்னிக்க.
பொள்ளாச்சி பாலியல் பயங்கரத்தில் 200க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் மௌன அலறல் ஓயவில்லை.
ஆளும்கட்சியைச் சேர்ந்தவர் கைதாகியிருக்கிறார்.
இது பாதிக்கப்பட்டவர்களின் நீதிக்குப் பாதையாக இருக்கவேண்டும். வேறெதற்காகவோ பயன்பட்டுவிடக் கூடாது.”என்பதாக பதிவிட்டிருக்கிறார்.












