தமிழக தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகள் அனுமதிக்கப்படலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இதற்கு மத்திய அரசின் பொது சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை தெரிவித்து மாநில அரசுக்கு கடிதம் எழுதியது .இதை பற்றி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எவ்வித கருத்தும் தெரிவிக்காத நிலையில் தற்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவரது கருத்தினை கூறி இருக்கிறார்.
“திரையரங்குகளில் 100சதவீத பார்வையாளர்களை அனுமதிக்கும் முடிவை திரும்பப் பெறுவது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நல்ல முடிவு எடுக்கப்படும். பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பி உள்ளதால் திரையரங்குகளில் 100% பார்வையாளர்களை அனுமதிக்கும் முடிவு திரும்பப்பெற வாய்ப்பு உள்ளது. மத்திய அரசின் பொதுச்சுகாதார விதிகளில் எந்த சமரசமும் இருக்காது’’ என்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.