கிரியேட்டிவ் என்டர்டெயின்மெண்ட் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் லலிதா தனஞ்செயன் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கபடதாரி’.
சிபிராஜ் நாயகனாகவும், நந்திதா ஸ்வேதா நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும், நாசர், ஜெயப்பிரகாஷ், ஜே.சதிஷ் குமார், மயில்சாமி மற்றும் சில முக்கிய நடிகர், நடிகைகளும் படத்தில் நடிக்கிறார்கள்.
கலை இயக்குநராக விதேஷ் பணியாற்ற, சில்வா சண்டை காட்சிகளை அமைக்க, பிரவீன் கே.எல். படத் தொகுப்பு பணியைச் செய்திருக்கிறார். சைமன் கே.கிங் இசையமைக்க, பாடல்களை கவிஞர் வைரமுத்து மற்றும் கு.கார்த்திக் எழுதியிருக்கிறார்கள். ராசாமதி ஒளிப்பதிவு. வணிகத்தை எஸ்.சரவணன் தலைமையேற்க, நிர்வாக தயாரிப்பு என்.சுப்பிரமணியன் கவனிக்கிறார்.
படத்தின் கதையை எம்.ஹேமந்த் ராவ் எழுத, திரைக்கதையையும் வசனங்களையும் இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனும், டாக்டர் .கோ. தனஞ்செயனும் எழுதியிருக்கிறார்கள். இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி படத்தை இயக்கியிருக்கிறார்.
பொதுவாக ரீமேக் படங்கள் மீது பலத்த எதிர்பார்ப்பும், பல நேரங்களில் முதல் படத்துடன் பெரும் ஒப்பிடலும் நிகழ்ந்து கொண்டே இருக்கும். ஆனால் தமிழில் இந்த ‘கபடதாரி’ திரைப்படம் நிறைய மாற்றங்களை அடைந்துள்ளது.
திரைக்கதை அமைப்பை கிரியேட்டிவ் புரடியூசர் ஜி .தனஞ்செயன் அமைத்துள்ளார். அவர்தான் இயக்குநர் ஹேமந்த் ராவை அழைத்து, அவர் உதவியுடனும், தமிழ்ப் பதிப்பின் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி மற்றும் எழுத்தாளர் ஜான் மகேந்திரடனும் இணைந்து திரைக்கதையை வடிவமைத்திருக்கிறார்.
தமிழ்ப் பதிப்பின் திரைக்கதை ஒரு குழுவாக, அனைவரது பங்களிப்பிலும் மிக சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா முதல் ‘ஆஸ்கர் புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான்வரை தங்கள் ஆதரவு கரம் நீட்டி வெளியிட்ட இந்தப் படத்தின் புரமோக்களும், அனைவரையும் கவர்ந்திழுத்திருக்கும் விஷுவல்களும், இந்தக் ‘கபடதாரி’ படத்தினை இக்காலக்கட்டத்தின் மிக முக்கிய படைப்பாக மாற்றியிருக்கிறது.
வரும் தைப் பூசம் பண்டிகை திருநாளான 2021, ஜனவரி 28 அன்று இத்திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது.