
அரசியலில் பல சாணக்கியர்களை ஓரங்கட்டி இரும்பு மனுஷி ஜெயலலிதாவின் மனதில் இடம் பிடித்தவர் சசிகலா. உடன் பிறவா சகோதரி.!
ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி எண் ஒன்று என்றால் இவர் இரண்டாவது அக்யூஸ்டு.
4 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு வருகிற 27 ஆம் தேதி விடுதலையாகிறார்.
அதே நாளில்தான் புனரமைக்கப்பட்ட ஜெயலலிதாவின் சமாதியை முதல்வர் பழனிசாமி திறந்து வைக்கிறார்.
இதற்கிடையில் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்து விட்டு திரும்பினார்.
என்ன பேசினார்கள் என்பது அவர்கள் மட்டுமே அறிந்ததாகும் .
இந்த நிலையில்தான் சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. காய்ச்சல்.
மருத்துவமனையில் சோதனை .கொரானா தொற்று இல்லை என மருத்துவ சோதனையில் தெரிவதாக சொன்னார்கள்.
பின்னர் அடுத்து நடந்த சோதனையில் கொரானா தொற்று இருப்பதாக சொல்லப்பட்டு விக் டோரியா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தற்போது பெங்களூரு பழைய விமான நிலையம் அருகில் இருக்கிற மணிபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அநேகமாக 27 ஆம் தேதி கழித்துதான் மருத்துவமனையிலிருந்து வெளியில் வருவார் என சொல்கிறார்கள்.
இதிலும் அரசியலா என கேட்க தோன்றுகிறது.












