இசைஞானியின் இளைய மகன் யுவன்சங்கர்ராஜா.
திரை உலகில் பிசியாக இருக்கிற முன்னணி இசை அமைப்பாளர்களில் இவரும் ஒருவர்.
தமிழ்,தெலுங்கு என இரண்டிலும் இவர் பிசி .
இவர் இரண்டு நிறுவனங்களை நடத்தி வருகிறார். அந்த நிறுவனங்கள் தொடர்பாக முக்கியமான எச்சரிக்கை -அறிக்கை வெளியாகி இருக்கிறது.
அவரே வெளியிட்டிருக்கும் அறிக்கை பண பரிவர்த்தனை தொடர்பானது.
“ஒய்.எஸ்.ஆர் .பிரைவேட் நிறுவனம் ,மற்றும் யு.ஒன் ரிக்கார்ட் பிரைவேட் நிறுவனம் சார்பில் என்னைத்தவிர வேறு யாருக்கும் பணவர்த்தனை செய்கிற உரிமை கிடையாது.ஒப்பந்தம் செய்கிற உரிமையும் கிடையாது. அப்படி வேறு யாராவது செய்திருந்தால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் “என எச்சரித்திருக்கிறார் .












