மறைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் சகோதரரும், ஆக்சன் கிங் அர்ஜுனின் உறவினருமான நடிகர் துருவா சார்ஜா கதாநாயகனாக நடித்துள்ள படம்தான் செம திமிரு.
.கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா.
இவர்களுடன் சம்பத்,பவித்ரா லோகேஷ் ,ரவி சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர்.பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படம் தமிழ்,தெலுங்கு,கன்னடம் என மும்மொழிப்படமாக உருவாகியுள்ளது.
பிப்ரவரி மாத வெளியீடுகளில் இந்த படமும் ஒன்று. பிப்ரவரி 19 ஆம் தேதி வெளியாக உள்ளது.
நந்த கிஷோர் இயக்கியுள்ள இப்படத்தை சிவார்ஜூன், பி.கே. கங்காதர் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
இப்படம் குறித்து நாயகன் துருவா சார்ஜா கூறியதாவது,
“இப்படத்தின் வில்லன் தான் கதாநாயகன். சிறுவயதில் ஏற்பட்ட ஒரு சம்பவம் அவனை முரட்டுத்தனமான மனிதனாக்குகிறது.மற்றவர்களுக்கு நம்மேல் பயம் இருந்தால் தான் தன்னை நேசிப்பாங்க என்ற ஒரு எண்ணமே அவனை இந்நிலைக்கு தள்ளி விடுகிறது. இப்படத்தில் நான் ஒரு திமிர்பிடித்த இளைஞனாக நடிக்கிறேன், ஆக்சன் கலந்த பக்கா கமர்சியல் படம் என்றாலும்,அம்மா, மகன் உறவு, கல்லூரி பேராசிரியையுடன் முரட்டுத்தனமான காதல் என அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
“படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சிக்காக இரண்டு மாதங்களுக்குள் 30 கிலோவுக்கு மேல் எடை குறைத்த சம்பவம் மிகவும் சவாலானது “என் உணவு பெரும்பாலும் முட்டைக்கோஸ் மற்றும் பீட்ரூட் போன்ற காய்கறிகள் தான்.உண்மையில், சொல்வதென்றால் பெரும்பாலும் நான் பட்டினி கிடந்தேன்.இப்படத்தில் அமெரிக்கவைச் சேர்ந்த கை கிரீன்,பிரான்சை சேர்ந்த மோர்கன் ஆஸ்டி,தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஜான் லூகாஸ், ஜெர்மனியைச் சேர்ந்த ஜோ லிண்டர் ஆகிய சர்வதேச பாடிபில்டர்கள் இதில் நடித்துள்ளனர் இவர்களுடனான சண்டைக்காட்சிகள் பார்வையாளர்களுக்கு பிரம்மிப்பூட்டும். தமிழில் பாலா, ஷங்கர் மற்றும் செல்வராகவன் ஆகியோரின் ரசிகன் நான் .” என்கிறார்.