ஹலிதா சமீம் இயக்கத்தில் வெளியாகவுள்ள “ஏலே” படத்தில் நடிகர் சமுத்திரகனி கிராமப்புறத்தில் குச்சி ஐஸ் விற்பனை செய்யும் “முத்துகுட்டி” என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சமீபத்தில் திருத்தணி முருகன் கோவில் முன்னால் சமுத்திரக்கனி , “குச்சி ஐஸ்” விற்பனை செய்யம் காட்சிகள் படமாக்கப்பட்டது. சமுத்திரகனி ஐஸ் விற்பதை கண்டு ரசிகர்கள் பெரும் கூட்டமாக கூடிவிட்டனர். இவர் கடவுள் மறுப்பாளரா என்பது தெரியாது ஆனால் சிவப்பு சிந்தனையாளர்.பகுத்தறிவு ஆள். வித்தியாசமான கேரக்டர்களில் நடிப்பதற்கு பெருநாட்டம் கொண்டவர்.படத்தில் குச்சி ஐஸ் விற்கிற வேலை.
அக்காட்சி முடிவடைந்ததும் சமுத்திரகனி அங்கிருந்த ரசிகர்கள் மற்றும் சுற்றுலாவாசிகளுடன் கலந்துரையாடி அவர்களுக்கு குச்சி ஐஸ் கொடுத்தார்.
வரும் பிப்ரவரி 12 ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் ஒளிப்பதிவை,தேனி ஈஸ்வர் கவனிக்க,காபெர் வாசுகி, அருள் தேவ் இசையமைத்து வருகின்றனர்.