தமிழ்த்திரையுலகில் கடந்த 2009 -ல் சுசீந்திரன் இயக்கிய ‘வெண்ணிலா கபடி குழு’ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால்.
தொடர்ந்து நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ராட்சசன் உட்பட பல படங்களில் நடித்து வந்தவர்,தற்போது எப்ஐஆர்,காடன், மோகன்தாஸ், இன்றுநேற்றுநாளை-2 உள்ளிட் ட படங்களில் நடித்து வருகிறார்,
விஷ்ணு விஷால் சினிமாவுக்கு வந்து 12 வருடம் ஆகிறது. இதையடுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் கூறியுள்ளதாவது, ”
“நம்பமுடியாத 12 வருடங்கள். இந்தப் பயணம் முழுவதும் கற்றுக்கொள்ளும் அனுபவமாக இருந்தது.
என்னுடைய பயம், வேதனை அனைத்தையும் கடந்து ஒவ்வொரு நாளும் புதிதாகக் கற்றுக் கொண்டிருக்கிறேன்.
ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு என் அன்பை அளிக்கிறேன். அடுத்து, காடன், எஃப்.ஐ.ஆர், மோகன் தாஸ், இன்று நேற்று நாளை 2, இயக்குநர் செல்லா, மற்றும் இயக்குநர் கோபிநாத்துடன் ஒரு படம் என பணிபுரிந்து வருகிறேன்.
இன்னும் சில சிறந்த கதைகள் மற்றும் இயக்குநர்களுடன் பணிபுரிய இருக்கிறேன்.கடந்த வருடம் கடினமானதாக அனைவருக்கும் அமைந்துவிட்டது.
எனக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இருந்தாலும் வாழ்க்கை என்பது தொடர்ந்து முன்னேறிச் செல்வதுதான். தொடர்ந்து அலையோடோ அல்லது அதை எதிர்த்தோ நீந்தி கொண்டிருப்போம்.”என்று கூறியுள்ளார்.