Thursday, April 16, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

நாலு டைரக்டர்களின் குட்டி காதல் கதைகள்.!

admin by admin
February 5, 2021
in News
423 4
0
591
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி.கே.கணேஷ் தயாரித்துள்ள படம் குட்டி ஸ்டோரி இந்த படத்தை முதல்முறையாக நான்கு முன்னணி இயக்குனர்கள் இணைந்து இயக்கியுள்ளனர்.

You might also like

ஒரு வித்தியாசமான மற்றும் சிந்திக்க வைக்க வரும் குற்றம் கடிதல் 2, !

கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’!

வெங்கட் பிரபு வெளியிட்ட ‘லெனின் பாண்டியன்’ டிரெய்லர் வெளியீடு!

முதல் தொகுப்பை கௌதம் வாசுதேவ மேனன் இரண்டாவது தொகுப்பை விஜய் மூன்றாவது தொகுப்பை வெங்கட் பிரபு நான்காவது தொகுப்பை நலன் குமாரசாமி ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர்.

முதல்முறையாக 4 இயக்குனர்கள் 4 கதைகளை இயக்கி பெரிய திரையில் வெளியாவது குறிப்பிடத்தக்கது

இதில் கௌதம் மேனன் இயக்கி உள்ள கதையில் அவரே நாயகனாக நடித்துள்ளார் அவருக்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார் .

விஜய் இயக்கியுள்ள கதையில் மேகா ஆகாஷ் நாயகியாகவும் அமிர் டாஸ் பிரதான் ஆர்யா சுகாசினி ஆகியோர் நடித்துள்ளனர்.

வெங்கட் பிரபு இயக்கியுள்ள கதையில் வருண் சங்கீதா சாக்ஷி ஆகியோர் நடித்துள்ளனர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள கதையில் விஜய் சேதுபதி அதிதி பாலன் நடித்துள்ளனர்.

 தயாரிப்பாளர் டாக்டர் .ஐசரி .கே. கணேஷ் பேசுகையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி இந்த குறும்பட கான்செப்ட்டை என்னிடம் சொன்னவுடன் எனக்கு பிடித்தது இது ஆந்தாலஜி மெத்தட் என்பதால் புதிதாக தோன்றியது உடனே ஒப்புக்கொண்டேன் முதல் முறையாக நான்கு பெரிய இயக்குனர்கள் இணைந்து இதை உருவாக்க உள்ளனர் என்றதும் இந்த படத்தின் மீதான ஈர்ப்பை அதிகப்படுத்தியது இந்த படத்தை தியேட்டரில் வெளியிடுகிறோம் காதலர் தினத்தை முன்னிட்டு வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி படம் வெளியாகிறது பெரிய படங்களுக்கு இணையாக இதற்கும் பட்ஜெட் ஒதுக்கி எடுத்துள்ளோம் என்றார்

இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் பேசுகையில் நான் கொரோனா லாக் டவுன் காலகட்டத்தில் பல குறும்படங்களை இயக்கினேன் அதிலும் காதல் கதை படங்களை இயக்குவது பிடித்ததாக இருந்தது இந்த கான்செப்ட் பற்றி என்னிடம் கூறியதும் முதலில் நான்கு இயக்குனர்களும் ஒன்றாகப் பேசி அவரவர் கதைகளை முடிவு செய்தோம் நான்கு கதைகளும் வித்தியாசமாக அமைந்தது என்னுடைய கதையை நான்கே நாட்களில் படமாக்கினேன் கதாநாயகியாக அமலா பால் நடித்து உள்ளார் முதலில் நான் நடிப்பதாக இல்லை அதன்பிறகு கதையைமுடித்தவுடன் நானே நடிக்க முடிவு செய்தேன் படம் நன்றாக வந்துள்ளது என்றார்

இயக்குனர் விஜய் பேசுகையில் முதலில் நாங்கள் நான்கு பேரும் சேர்ந்து இதுபோன்ற ஒரு காதல் கதை படத்தை இயக்கப் போகிறோம் என்றதும் எதிர்பார்ப்பு அதிகமானது மற்ற இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றும் போது அவர்களுடைய ஸ்டைலை என்னால் கற்றுக்கொள்ள முடிந்தது இந்த கதைக்கு யாரை நடிக்க வைக்கலாம் என யோசித்தபோது மேகா ஆகாஷ் பொருத்தமாக இருப்பார் என தோன்றியது உடனே அவரிடம் கதையை சொன்னேன் அவரும் நடிக்க ஒப்புக் கொண்டு நடித்துக்கொடுத்தார் நான் ஏழு நாட்களில் இந்த கதையை படமாக்கினேன் முழுக்க முழுக்க சென்னையிலேயே எடுத்துள்ளோம் என்றார்

இயக்குனர் வெங்கட் பிரபு பேசுகையில் முதலில் நாங்கள் நான்கு பேரும் இணைந்து இந்த ஆந்தாலஜிபடத்தை உருவாக்கி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது அதிலும் என் கதை அனிமேஷன் விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது அதில் காதலும் கலந்து சொல்லியுள்ளேன் ஒரு குறும்படத்திற்கு தேவையான எல்லா அம்சங்களும் இதில் உள்ளது எனக்கும் இது ஒரு புது வித அனுபவத்தை தந்துள்ளது என்றார்

இயக்குனர் நலன் குமாரசாமி பேசியதாவது லாக் டவுன் முடிந்தவுடன் எனது புதிய படத்தை தொடங்க திட்டமிட்டு இருந்தேன் அதற்கு முன்பாக இந்த குறும்பட வாய்ப்பு வந்தது எனக்கும் அந்த படத்துக்கு முன்னர் இதை இயக்கினால் என்னை தயார்படுத்திக் கொள்ள முடியும் என்பதால் ஒப்புக்கொண்டேன் இந்த கதையை எழுதியவுடன் என் நண்பர் விஜய் சேதுபதி இடம் யாரை நடிக்க வைக்கலாம் என கேட்டேன் அவர் எனக்கு இந்த கதை பிடித்துள்ளது நானே நடிக்கிறேன் என்று கூறி நடித்துக் கொடுத்தார் மற்ற இயக்குனர்கள் அவர்களுக்கான கதையை குறிப்பிட்ட நாட்களில் முடித்துக் கொடுத்தனர் நான் கொஞ்சம் அதிகமாக நாட்களை எடுத்துக்கொண்டேன் 11 நாட்கள் மிகவும் சிரமப்பட்டு இந்த கதையை முடித்தேன் ஒரு புது அனுபவத்தை தந்துள்ளது இயக்குனர் கௌதம் மேனனும் படப்பிடிப்பின்போது சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து படப்பிடிப்பை பார்வையிட்டார் ஒரு சில காட்சிகளுக்கு விஜய் சேதுபதியும் உதவி செய்தார் நாங்கள் நினைத்தது போலவே இந்த கதை அமைந்துள்ளது என்றார்

Tags: ஏ எல் விஜய்கவுதம் மேனன்குட்டி கதைடாக்டர் ஐசரி.கே.கணேஷ்நலன் குமாரசாமிவெங்கட் பிரபு
admin

admin

Related Posts

ஒரு வித்தியாசமான மற்றும் சிந்திக்க வைக்க வரும்  குற்றம் கடிதல் 2, !
News

ஒரு வித்தியாசமான மற்றும் சிந்திக்க வைக்க வரும் குற்றம் கடிதல் 2, !

by admin
April 16, 2026
கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’!
News

கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’!

by admin
April 16, 2026
வெங்கட் பிரபு வெளியிட்ட ‘லெனின் பாண்டியன்’ டிரெய்லர் வெளியீடு!
News

வெங்கட் பிரபு வெளியிட்ட ‘லெனின் பாண்டியன்’ டிரெய்லர் வெளியீடு!

by admin
April 16, 2026
‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) , 100 கோடி கிளப்பில் சேரும்! –  விக்னேஷ் சிவன்!
News

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) , 100 கோடி கிளப்பில் சேரும்! –  விக்னேஷ் சிவன்!

by admin
April 16, 2026
விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி ‘ படத்தின் டைட்டில் வெளியீடு!
News

விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி ‘ படத்தின் டைட்டில் வெளியீடு!

by admin
April 16, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?