Sunday, August 2, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

“திரையரங்குகளுக்கு சாபக்கேடு !” இயக்குநர் பேரரசு சாடல்.!

admin by admin
February 16, 2021
in News
421 4
0
588
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜீசஸ் கிரேஸ் சினி எண்டர்டெயின்மெண்ட்  சார்பில் ஞான ஆரோக்கிய தயாரித்து,
எழுதி இயக்கியிருக்கும் படம் ‘உதிர்’. இதற்கு இயக்குநர் சொன்ன அர்த்தம்தான் பயங்கர வேதனையாக இருந்தது. உதிரம் என்பதின் சுருக்கமே உதிர் என்றார் .அதாவது ‘ரத்தம்’ என்பதை குறிக்கும் என்கிறார். முதலில் உதிரம் என்பதே தமிழ் இல்லை. உதிர் என்றால் உதிர்தல் என்றுதான் பொருள் .ஆனால் தயாரிப்பாளர் சொல்வதோ?

You might also like

கார்த்தியின் ‘சர்தார் 2’ டீசர் வெளியானது!

வி ஜே சித்து இயக்குநராக அறிமுகமாகும் ‘டயங்கரம்’ ! படப்பிடிப்பு நிறைவு!!

க்ரைம் த்ரில்லராக உருவாகும் ‘பீப்’ திரைப்படம்!

விதுஷ், சந்தோஷ் சரவணன், மனிஷா ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும்இப்படத்தில் மனோபாலா, தேவதர்ஷினி, சிங்கம்புலி, உள்ளிட்ட
 பலர் நடித்திருக்கிறார்கள்.

“நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…” உள்ளிட்ட பல உலக புகழ்பெற்ற ஆன்மீக பாடல்களுக்கு இசையமைத்த அரவிந்த் ஸ்ரீராம், ஈஸ்வர் ஆனந்த் ஆகியோர் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா  சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இசையமைப்பாளர் தினா, இயக்குநர் பேரரசு, கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பேரரசு, “திரையரங்குகளில் திரைப்படங்கள் பார்ப்பது என்பதே நல்ல அனுபவம். டூரிங் டாக்கீஸ்களில் படம் பார்த்த அனுபவங்களை மறக்க முடியாது. அப்படிப்பட்ட திரையரங்கங்கள் இன்று காணாமல் போய்விட்ட சூழலில், தற்போது திரையரங்குகளுக்கு புதிய சாபக்கேடு வந்திருக்கிறது. கடலில் பிடிக்கப்பட்ட மீன்களை தான் கடல் மீன் என்போம், ஏரிகளில் பிடிக்கும் மீன்களை ஏரி மீன் என்போம். அதுபோல், திரையரங்குகளில் வெளியானால் தான் அது திரைப்படம். அப்போது தான் திரைப்படங்களுக்கு மரியாதை. ஆனால், தற்போது செல்போனில் படங்கள் வெளியாக தொடங்கியிருக்கிறது. அதனால், திரைப்படங்கள் செல் படங்களாகிவிட்டது.

இந்த நிலை தொடர்ந்தால் திரைப்படங்களுக்கு மட்டும் இன்றி திரை நட்சத்திரங்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கும் மரியாதை இல்லாமல் போய்விடும். எனவே, திரைப்படங்களை திரையரங்குகளில் மட்டுமே வெளியிட வேண்டும், அதற்கு ரசிகர்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். சூழ்நிலை காரணமாக, ஒடிடி-யில் வெளியிடலாம், ஆனால் அதையே தொடரும் சூழலை உருவாக்க கூடாது. எனவே பெரிய பெரிய தயாரிப்பாளர்கள், நடிகர்கள் திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிடுவதற்கான முயற்சியில் இறங்க வேண்டும். அது தான் திரைப்படங்களுக்கு மரியாதை.

‘உதிர்’ படத்தின் பாடல்கள் அனைத்தும் நன்றாக இருந்தது. இயக்குநர் ஞான ஆரோக்கிய ராஜா, என்னையும், டி.ராஜேந்தரையும் மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு, படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார். நான் என் படங்களில் பாடல்கள் எழுத யோசித்தேன். வேறு ஒரு பாடலாசிரியர் மூலம் தான் பாடல் எழுத முயற்சித்தோம். ஆனால், எனக்கு திருப்தியளிக்காததால் ஒரு கட்டத்தில், எனது வரிகளே நன்றாக இருப்பதாக இசையமைப்பாளர் தினா கூறிவிட்டார். அப்படி தான் நான் பாடலாசிரியரானேன். நான் பாடல் எழுத முதல் காரணம், தளபதி விஜய், இரண்டாவது இசையமைப்பாளர் தினா. நான் கூட இயக்கும் பாடல்கள் மட்டும் தான். ஆனால், ஞான ஆரோக்கிய ராஜா, தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார். அதனால், அவரை என்னை விட ஒரு படி தாண்டிவிட்டார். ‘உதிர்’ படத்தின் மூலம் அவர் மிகப்பெரிய வெற்றியை பெற்று தொடர்ந்து வெற்றிகரமான இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், பாடலாசிரியராகவும் பயணிக்க வேண்டும், என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.

ஜாக்குவார் தங்கம் பேசுகையில், “சினிமா நடிகர்களுக்கு திருமணத்திற்கு பெண் தர மாட்டார்கள், வீடு கொடுக்க மாட்டார்கள். ஆனால், இங்கு ஒரு குடும்பமே சேர்ந்து சினிமாவுக்கு ஒரு இயக்குநரை கொடுத்திருக்கிறார்கள். குடும்பமே சேர்ந்து தயாரித்திருக்கும் இந்த படம் நிச்சயம் மிக நல்ல படமாக தான் இருக்கும். ஞான ஆரோக்கிய ராஜாவின் கனவை நிறைவேற்றிய அவரது குடும்பத்திற்காக உதிர் திரைப்படம் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்.” என்றார்.

இசையமைப்பாளர் தினா பேசுகையில், “இயக்குநர் ஞான ஆரோக்கிய ராஜா இந்த படத்திற்காக அவர் அனுபவித்த வலிகள் பற்றி அவரின் குடும்பத்தார் சொல்லிய போது, அவைகள் என் கண் முன் நின்றது. ஒரு குடும்பமே இந்த படம் உருவாக காரணமாக இருக்கிறார்கள். நண்பர்கள் சேர்ந்து இப்படி படம் தயாரிப்பார்கள். ஆனால், இங்கு ஒரு குடும்பமே சேர்ந்து படம் தயாரித்திருப்பது வியப்பாக இருக்கிறது. அவர்களுக்கு என் பாராட்டுக்கள். படத்திற்கு இசையமைத்த அரவிந்த் ஸ்ரீராம் புகழ் பெற்ற பல ஆன்மீக பாடல்களை கொடுத்திருக்கிறார். அவர் சினிமாவுக்கு இசையமைக்கவில்லை என்றாலும், அவருடைய ஆன்மீக பாடல்கள் உலகம் முழுவதும் பிரபலம். அவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். ஆனால், இந்த அரங்கில் அவர் உட்கார்ந்திருப்பது போல எனக்கு தெரிகிறது. படத்தின் மற்றொரு இசையமைப்பாலர் ஈஸ்வர் ஆனந்த், அவரும் பல படங்களுக்கு இசையமைக்க வேண்டும். இயக்குநர்கள் பாடல்கள் எழுதும் போது, அந்த பாடல்கள் சிறப்பாக வரும், என்பதில் எனக்கு பெரிய நம்பிக்கை இருக்கிறது. அதற்கு உதாரணம், பேரரசு சார். அந்த வகையில், இந்த படத்தின் பாடல்களை ஞான ஆரோக்கிய ராஜா சிறப்பாக பாடல்கள் எழுதியிருக்கிறார். படமும் சிறப்பாக வந்திருக்கும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.” என்றார்.

நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அனைத்து சிறப்பு விருந்தினர்களும் உரையாற்றிய பிறகு இசை குறுந்தகடு வெளியிடப்பட்டது.

Tags: உதிர்ஜாக்குவார் தங்கம்தீனாபேரரசு
admin

admin

Related Posts

கார்த்தியின் ‘சர்தார் 2’ டீசர் வெளியானது!
News

கார்த்தியின் ‘சர்தார் 2’ டீசர் வெளியானது!

by admin
August 1, 2026
வி ஜே சித்து இயக்குநராக அறிமுகமாகும் ‘டயங்கரம்’ !  படப்பிடிப்பு  நிறைவு!!
News

வி ஜே சித்து இயக்குநராக அறிமுகமாகும் ‘டயங்கரம்’ ! படப்பிடிப்பு நிறைவு!!

by admin
August 1, 2026
க்ரைம் த்ரில்லராக உருவாகும் ‘பீப்’ திரைப்படம்!
News

க்ரைம் த்ரில்லராக உருவாகும் ‘பீப்’ திரைப்படம்!

by admin
August 1, 2026
புதியவர்களின் கூட்டணியில் ‘ஆலி’ :  ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது!!
News

புதியவர்களின் கூட்டணியில் ‘ஆலி’ : ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது!!

by admin
August 1, 2026
‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ டீசர் வெளியானது !
News

‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ டீசர் வெளியானது !

by admin
August 1, 2026

Recent News

வி ஜே சித்து இயக்குநராக அறிமுகமாகும் ‘டயங்கரம்’ !  படப்பிடிப்பு  நிறைவு!!

வி ஜே சித்து இயக்குநராக அறிமுகமாகும் ‘டயங்கரம்’ ! படப்பிடிப்பு நிறைவு!!

August 1, 2026
க்ரைம் த்ரில்லராக உருவாகும் ‘பீப்’ திரைப்படம்!

க்ரைம் த்ரில்லராக உருவாகும் ‘பீப்’ திரைப்படம்!

August 1, 2026
புதியவர்களின் கூட்டணியில் ‘ஆலி’ :  ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது!!

புதியவர்களின் கூட்டணியில் ‘ஆலி’ : ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது!!

August 1, 2026
‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ டீசர் வெளியானது !

‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ டீசர் வெளியானது !

August 1, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?