பிரசாத் லேபரேட்டரி தியேட்டரை ஒரு வழி பண்ணிவிட்டார்கள் ‘வா பகண்டையா”பட ஆடியோ விழாவுக்கு வரவழைக்கப்பட்டவர்கள் .
விழுப்புரம் அருகில் உள்ள ஊரின் பெயர்தான் படத்தின் தலைப்பு !
10 பஸ்களில் தன்னுடைய ஆதரவாளர்களை அழைத்து வந்துவிட்டார் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான ப. ஜெயகுமார் .பா.ஜ.க. பிரமுகர்.நிகழ்ச்சி முடிந்ததும் அங்கேயே பிரியாணி விருந்து.டோக்கன் வேற.! கேட்கவா வேண்டும்!
படத்தின் பாடல் காட்சிகள் நிகழ்ச்சியில் திரையிடப்பட்டன.
திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர் முரளி ராமசாமி , பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி ,இயக்குநர்கள் விக்ரமன் ,பேரரசு ஆகியோர் பேசினார்கள்.
விக்ரமனும் ,செல்வமணியும்தான் தைரியமுடன் தங்களின் கருத்துகளை பதிவு செய்தார்கள் என்பதை குறிப்பிட்டேயாகவேண்டும் .
பாடல் வரிகளில். “தமிழ் ஈழம் காண்போம்” என இருந்ததை குறிப்பிட்டு விக்ரமன் பாராட்டினார். அவையில் பலத்த கைதட்டல்கள்.!
இதைப்போல “வர்ணம் வேண்டும்” என்கிற வசனத்தை குறிப்பிட்டு தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்தார் செல்வமணி.
“வில்லன் பேசிய வசனமா,ஹீரோ பேசிய வசனமா என்பது தெரியவில்லை. வர்ணம் வேண்டும் என்று பேசக்கூடாது. வர்ணம் என்பது மக்களை நாசப்படுத்தியது. தலையில் பிறந்தவன் ,மார்பில் பிறந்தவன் ,வயிற்றில் பிறந்தவன் ,காலில் பிறந்தவன் என்று சொல்லி நாசப்படுத்தியது போதாதா?இன்னமும் சொல்லிக்கொண்டு இருக்கக்கூடாது “என்றதும் அவையே கிடுகிடுத்துப்போனது. அந்தளவுக்கு கைதட்டல்.
இயக்குனர் ஜெயகுமார் தலையை குனிந்து கொண்டார்.
பேரரசு பேசியபோது மின்னல், இடி என்று சொல்லுமளவுக்கு ஆரவாரம் கைதட்டல்.!
அவர் தளபதி விஜய்யின் பெயரை சொன்னதும் கூட்டத்தினர் ஆர்ப்பரித்தனர்.