பிக்பாஸில் பேமஸ் ஆனவர் ஷிவானி நாராயணன்.
“பாலாவுக்கு சேவகம் செய்யவா வந்தே ” என்று கேட்டு அவரது அம்மா கண்டித்தாரே அதே ஷிவானிதான்.! யாருடைய தயவில் என்பது தெரியாது ,90 நாட்களுக்கு மேலும் தாக்குப்பிடித்தார்.
அடிக்கடி இன்ஸ்டராகிராமில் கவர்ச்சிப்படங்களாக போட்டுத் தள்ளுகிறார்.ஆனாலும் பட வாய்ப்புகள் வந்த மாதிரி தெரியவில்லை.
அண்மையில் இவரது செல்லக்குட்டி நாய்க்கு பிறந்த நாளாம். நெருங்கிய நண்பர்களான பாலா ,ரம்யா பாண்டியன் உள்ளிட்ட பிக்பாஸ் தோஸ்த்துகளை வரவழைத்து 5 கேக் வெட்டி ஆடம்பரமாக கொண்டாடியிருக்கிறார்.
இதெல்லாம் ஓவராக தெரியவில்லையா என்று நெட்டிசன்கள் கணடனம் தெரிவித்து வருகிறார்கள்.கையில் காசுள்ள மகராசி!
https://twitter.com/i/status/1354725695709036549