கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் படம் வெளியாகி நெடு நாள் ஆகியிருப்பதால் அவர் இயக்கிய ஜகமே தந்திரம் படம் வெளியாகும் நாளை அவரது ரசிகர்களுடன் தனுஷின் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.
தனுஷுடன் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோவும் இணைந்து நடித்திருக்கிற படம்.இந்த படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் தயாரித்திருக்கிறார்.
ஐஸ்வர்யா லட்சுமி,லால் ஜோஸ், கலையரசன்,ராசுக்குட்டி இன்னும் சில முக்கிய நடிக நடிகையர் நடித்திருக்கிறார்கள்.
சந்தோஷ் நாராயணன் இசை. ஸ்ரேயாஸ் கிருஷ்ணா கேமரா .
வெகுநாட்களாக இந்த படத்தின் அப்டேட் குறித்து தனுஷின் ரசிகர்கள் கேள்வி கேட்டு வந்தார்கள். தியேட்டரில் வெளியாகும் என எதிர்பார்த்திருந்த தனுஷுக்கு நெட் பிலிக்சில் வெளியாகப்போகிறது என்கிற தகவல் கிடைத்ததும் கடுப்பாகிவிட்டாராம்.
தலைவரே காண்டில் இருக்கிறார் என்றால் ரசிகர்களை பற்றி கேட்க வேண்டுமா?
தனுஷுக்கும் தயாரிப்பாளர் சசிகாந்துக்கும் பேச்சு வார்த்தை இல்லாமல் போய்விட்டதாக சொல்கிறார்கள். பிப்ரவரி 22 ஆம் தேதி ஓடிடி தளத்தில் ஜகமே தந்திரம் வெளிவருகிறது.
இந்த படத்தைப்பற்றி ,அதன் டீசர் வெளியானதை பற்றி ஒரு வரி கூட டிவிட்டரில் தனுஷ் பதிவு செய்யவில்லை.
ஆனால் கலைப்புலி தாணுவின் கர்ணன் படத்தின் போஸ்டர் வெளியான உடனே தனுஷ் அதை ஷேர் செய்து விட்டார். தலைவனை தொடர்ந்து அவரது ரசிகர்களும் குஷியாகி டிவிட்டரை தெறிக்கவிட்டிருக்கிறார்கள்.!