ஆர்யா…தமிழ்த்திரையுலகில் முக்கியமான நடிகர்.
இவரைப்பற்றி அதிக அளவில் கிசுகிசுக்கள் வந்து ஒரு காலத்தில் சூடேற்றிக்கொண்டிருந்தது.
தற்போது ஜெர்மனியில் வாழுகிற ஈழத்தமிழ் பெண் விடீஷா திடுக்கிடும் மோசடி புகாரை கூறியிருக்கிறார்.
திருமணம் செய்வதாக வாக்குறுதி கொடுத்து விட்டு அந்தப்பெண்ணை ஏமாற்றிவிட்டதாக புகாரில் பதிவு செய்திருக்கிறார்.
கலியாணம் செய்வதாக சொல்லி 70 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டிருக்கிறார். திருமணமும் செய்து கொள்ளவில்லை. பணத்தையும் திருப்பிக்கொடுக்கவில்லை. ஆர்யா ஏமாற்றி விட்டார்.அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சொல்லி இந்திய பிரதமர் மோடியின் அலுவலகம் ,தமிழக அரசின் தலைமைச்செயலாளர் ஆகியோருக்கு புகார் மனுவை அனுப்பி இருக்கிறார்.
ஆனால் வட இந்திய நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டு விட்டார்.
ஆர்யா மீதான புகார் மீது எந்தவிதமான நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.