ஒண்ணை கட்டிக்கிட்டே அவனவன் முழி பிதுங்கி கிடக்கிறான் .
இந்த நடிகை நாலாவது பொண்டாட்டியா நான் வரத் தயார் .உங்கட்டிலில் ஒரு ஓரத்தை ஒதுக்கித்தாய்யான்னு சொல்லுது !
காலக்கொடுமைய்யா!
இந்த கொடுமை நம்ம பக்கத்து மாவட்டமான தெலுங்கு சீமையிலதான் நடக்குது.
பவன் கல்யாண். சூப்பரு நடிகர். சிரஞ்சீவிக்கு தம்பி .இப்ப மூணாவது சம்சாரத்துடன் வாழ்க்கை. வெளிநாட்டுப் பொண்ணு.
இது ஊர் உலகத்துக்கே தெரியும். அரசியல் கட்சி தலைவராகவும் இருக்கிறார்.
இவரும் நடிகை ஆஷு ரெட்டியும் வெவ்வேற படங்களில் நடிச்சிட்டிருந்தாங்க .வேற வேற செட்.!
லஞ்ச் பிரேக்ல பவன் கல்யாணை நடிகை சந்திச்சு சந்தோஷமா பேசியிருக்கு ,பொண்ணு. சூப்பரு ஸ்டார் ஆச்சே.சந்தோசம் தாங்கல .போட்டோ எடுத்துக்கொண்டு அப்படியே ஆட்டோ கிராப் வாங்கியிருக்கு.
இப்ப அந்த போட்டோவை சோசியல் மீடியாவில் போஸ்ட் பண்ணிட்டு சில பல வரிகளையும் எழுதியிருக்கு.
“அவரை நான் சந்திச்சத இன்னமும் ஞாபகத்தில் வெச்சிருக்கேன் .நாங்க ரெண்டு மணி நேரம் பேசிட்டிருந்தோம்.என்னோட சந்தோஷத்துக்கு எல்லையே கிடையாது .தித்திப்பான வார்த்தைகளை எழுதிக்கொடுத்தார்.அவர்தான் என்னுடைய முதல் காதலர் “
சோசியல் மீடியா புத்திசாலிகள் சும்மா இருப்பாங்களா?
“அவரை கல்யாணம் பண்ணிக்கிற சான்ஸ் கொடுத்தா அவருக்கு நாலாவது பொண்டாட்டியா போவதற்கு சம்மதமா?” ன்னு ஒரு ஆளு கேட்டுட்டான்.
அசரலியே அம்மணி. ” நான் உடனே ஓகே சொல்லிடுவேன்”!
கையில் பச்சையும் குத்தியாச்சு.