தமிழக அரசியலில் முன்பெல்லாம் பா.ஜ.க .வை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமியின் ‘கருத்துகள்’ அடிக்கடி வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தும்.
யார் அடித்த அடியிலோ மனிதர் தற்போதெல்லாம் இந்தப்பக்கம் வருவதே இல்லை.!
ஒருவேளை தமிழருவி மணியனை எதிர்த்து தன்னால் தாக்குப்பிடிக்க முடியாது என்கிற பயம் காரணமாக இருக்கலாமோ ?
இருக்கலாம்.
தமிழருவி மணியனின் காந்திய மக்கள் இயக்கம் தமிழகம் முழுவதும் ஆலமரமாக பரவி விழுதுகள் பரப்பி வலுவுடன் இருக்கிற பயத்தினால் தன்னால் அங்கு வளர முடியாது என்று சுவாமி வடதேசத்துப்பக்கமாகவே ஒதுங்கிவிட்டார்.
அதுவும் நல்லதுதான்.!
தமிழருவி மணியன் தற்போது அதிரடி முடிவினை எடுத்திருக்கிறார்.
“காந்திய மக்கள் இயக்கம் சட்டப் பேரவை புறக்கணிக்கிறது ! காலத்தில் நிற்கிற எந்த கட்சியின் மீதும் நம்பிக்கை இல்லை” என்பதே அந்த முடிவு.
தமிழகம் இந்த முடிவை எப்படி தாங்கப்போகிறதோ!
ஹே …கடவுளே!