“மிர்சாபூர் கலாசாரத்தில் உயர்ந்த ஊர். இங்குதான் விந்தியாச்சல் ஆலயம் இருக்கிறது.108 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று.
கலாச்சாரத்திலும் ஆன்மீகத்திலும் உயர்வான மிர்சாபூரை இழிவுபடுத்தும் வகையில் ‘மிர்சாபூர் ‘என்கிற வெப் சீரியலை எடுத்திருக்கிறார்கள் .
வெட்கக்கேடானது.இழிவானது . மீனாவாக நடித்திருக்கிற நடிகை ரசிகா துகல் வேலைக்காரன், வயதான மாமனார் ஆகியோருடன் கள்ள உறவு கொண்டிருப்பதாக காட்டுகிறார்கள்.ஆகவே அந்த தொடரை தடை செய்ய வேண்டும் “என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவாகி ,அந்த தொடரை வெளியிடும் அமேஸான் தளத்துக்கு நோட்டீசும் வந்திருக்கிறது.
சிலர் முணுமுணுப்பது காதில் விழுகிறது..
“மாமனாருடன் கள்ள உறவு வைத்திருந்த கதைதானே ‘சிந்து சமவெளி. மாமனாருடன் மருமகள் அமலாபால் கள்ள உறவு வைத்திருப்பது போல இயக்குநர் சாமி படம் எடுத்திருந்தாரே ! தமிழ்நாட்டில் பெரிய பெரிய கோவில்கள் இல்லையா,இங்கு இல்லாத கலாச்சாரமா ?சிந்து சமவெளியை அனுமதித்தவர்கள் மிர்ஜாபூரை தடை செய்யக்கோருவது நியாயமா ? ” என முணுமுணுப்பது கேட்காமல் இல்லை.
மிர்ஜாபூரை விட கேவலமான தொடர்கள் வருவது தெரியாதா என்ன?