நெடுந்தூரங்களை பைக்கில் கடப்பதில் ‘தல’அஜித்துக்கு ஆசை அதிகம்.
ஆனால் எப்போது எங்கே செல்வேன் என்பதை சொல்ல மாட்டார். சொன்னால் சுதந்திரமாக பைக்கில் செல்ல முடியாது.
முகத்தை மறைத்து ஹெல்மெட் போட்டுக்கொண்டு செல்கிற ஒவ்வொருவரையும் நிறுத்தி பார்த்து விட்டுத்தான் ரசிகர்கள் அந்த ஆளை அனுப்புவார்கள்.தன்னால் வேறு ஒருவர் பாதிக்கப்படுவதை ஒருபோதும் விரும்புகிறவர் அல்லர் அஜித்.
இதனால் யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக சில நண்பர்கள் சூழ சென்று விடுவார்.
தற்போது கொல்கத்தாவில் சைக்கிளில் பயணம். வெளிமாநிலங்களில் அவரால் சுற்ற முடிகிறது..முகத்தை மறைத்துக்கொண்டுதான்!
வலிமை படப்பிடிப்பு இன்னும் 25 சதவீதம்தான் பாக்கி இருக்கிறது. தயாரிப்பாளர் போனிகபூருக்கும் ,இயக்குநர் எச்.வினோத்துக்கும் “எப்படா படத்தை முடிப்போம்” என்கிற மனநிலைதான்.
இல்லாவிட்டால் வல்லரசு நாடுகளிடம் அப்டேட் கேட்க ஆரம்பித்தாலும் வியப்பதற்கில்லை.